என்ன தூக்கி வெச்சதே இல்லல நீ.. டிடிஃஎப் வாசனிடம் பொஸசிவ்-ஆன அவரின் மனைவி – ப்ரோமோ!
Bigg Boss 10 Family Week: தமிழில் மக்களிடையே அதிகமாக பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் சீசன் 10. இன்று (26/11/2026) பிக் பாஸில் டிடிஃஎப் வாசனின் மனைவி மற்றும் அம்மா வந்திருந்தனர். இந்நிலையில், தற்போது வெளியான 4வது ப்ரோமோவில், டிடிஃஎப் வாசனின் மனைவி பிரகாசினி, அவரிடம் பொஸசிவ்-ஆனது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் டிவியில் மக்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் மிக பிரம்மாண்டமாக தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சியானது மொத்தம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது 12வது வாரத்தின் முடிவில் வெறும் 8 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருகிறார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியின் இறுதிக்கான டிக்கெட் டூ ஃபினாலே பாஸை, தன்யா (Dhanya) வென்ற நிலையில், அவர் இந்த நிகழ்ச்சியின் இறுதி வரையில் இந்த நிகழ்ச்சியில் இருப்பார். அந்த விதத்தில் பிக் பாஸில் இந்த வாரமானது முழுக்க பேமிலி வீக் என்ற நிலையில், போட்டியாளர்களின் குடும்பங்கள் அவர்களை நேரில் சந்தித்து வருகிறார்கள்.
இறுதியாக இன்று (26/11/ 2026) தன்யா மற்றும் டிடி ஃஎப் வாசன் (TTF Vasan) இருவரின் குடும்பம் வந்திருந்தது. அதில் டிடி எப் வாசனின் குடும்பம் வந்த நிலையில், அவரின் மனைவி வாசனிடம் பொஸசிவாக பேசியது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: தமிழ் – மலையாளம் மொழிகளில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன?
டிடிஃஎப் வாசனிடம் பொஸசிவ்-ஆன அவரின் மனைவி பிரகாஷினி:
இந்த ப்ரோமோவில் டிடிஃஎப் வாசனின் மனைவி, “கோபம் வந்தால் என்ன பண்ணுவீங்க சார்.. நீ கரீஷ்மா, அக்காவிடம் கிச்சனில் வைத்து என்ன சொன்ன.. கோபம் வந்தால்.. முத்தம் கொடுப்பேன்-னு சொன்ன…” என கேட்டார் அதற்கு வாசன், “அது காமெடி டி.”. என சொன்னார். அதற்கு அவரின் மனைவி, “காமடியோ என்னவோ.. நான் எவ்வளவு ஆசையா கேட்டு வந்தேன்” என கூறினார். அதன் பின் பேசிய வாசன், “இங்க ஒருமுறை தன்யா, எனது தலையை சீவி விட்டாரே.. அது உனக்கு கோபமாக இருந்ததா?” என கேட்டார்.
இதையும் படிங்க: உன்னை நீயே.. விஜய்குமாரின் அறிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!
அதற்கு அவரின் மனைவி, “இல்ல அது பொஸசிவ் ஆனேன்” என சொன்னார். மேலும் வாசன் பேசிய நிலையில், “கவ்பாய் டாஸ்கில் ரெண்டுபேர் தூக்கி வெச்சிருக்கேன் அத பாத்தியா?” என கேட்டார். அதற்கு வாசனின் மனைவி செல்லமாக அழுதுகொண்டே, “என்னை தூக்கி வைத்ததே இல்ல-ல நீ” என கேட்கும்படி இந்த ப்ரோமோ உள்ளது. இந்த ப்ரோமோவானது இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 81வது நாள் 4வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day81 #Promo4 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/HXIOnuJNo1
— Vijay Television (@vijaytelevision) November 26, 2026
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 12வது வாரத்தின் இறுதியில் உள்ளது. கடந்த 3 வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில், இந்த வாரத்திலும் டபுள் எவிக்ஷன் இருக்கிறது. இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சியில் முடிவடையும் நிலையில், டைட்டில் வின்னர் யார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.