பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த டிடிஎஃப் வாசனின் மனைவி மற்றும் அம்மா… வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொரு குடும்பமாக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது டிடிஎஃப் வாசனின் குடும்பத்தினர் உள்ளே செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சின்னத்திரையில் ரசிகரக்ளிடையே அதிகம் வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10). இந்த நிகழ்ச்சியில் 11 வார்ங்கள் முடிவடைந்து தற்போது 12-வது வாரம் சென்று கொண்டு இருக்கின்றது. தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் இதுவரை 16 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மீதம் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 12-வது வாரம் எஞ்சி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 19 போட்டியாளர்களும் மீதம் 5 போட்டியாளர்கள் வைல்கார்ட் போட்டியாளர்களாகவும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வைல்கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் தமிழ் சீசன் 10 போட்டியில் கலந்துகொண்டவர் டிடிஎஃப் வாசன்.
யூடியூப் மூலம் பிரபலமான இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு தமிழக மக்களிடையே அதிக அளவில் பிரபலமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பைக் ரேஸராக இருக்கும் டிடிஎஃப் வாசனுக்கு இளம் தலைமுறையினர் இடையே வரவேற்பு அதிகமாக இருந்து வந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மற்றவர்களும் வரவேற்பைப் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த டிடிஎஃப் வாசனின் மனைவி மற்றும் அம்மா:
இந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஃபேமிலி வாரம் சென்று கொண்டு இருக்கின்றது. இன்று பிக்பாஸ் வீட்டிற்கு டிடிஎஃப் வாசனின் அம்மா மற்றும் மனைவி இருவரும் வருவது தொடர்பான புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் டிடிஎஃப் வாசன் அம்மா மனைவியை பார்த்ததும் மிகுந்த உற்சாகத்தில் துள்ளி குதிக்கிறார். மேலும் மனைவியை தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் வருவது அம்மா மற்றும் மனைவிக்கு முத்தம் கொடுப்பது என அனைவரையும் மகிழ்ச்சியடைய வைக்கும் புரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#Day81 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/nuTYq6fGRw
— Vijay Television (@vijaytelevision) November 26, 2026
Also Read… சிக்கலில் கமல் ஹாசனின் இந்தியன் 3 படம்? வைரலாகும் தகவல்