AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்த உலகத்துல நான் தான் லக்கியஸ்ட் பர்சன்… பிக்பாஸில் எமோஷ்னலாக பேசிய தன்யா – வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 12-வது வாரம் ஃபேமிலி வீக் டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இதுவரை 4 போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள நிலையில் இன்று மேலும் இரண்டு போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர்.

இந்த உலகத்துல நான் தான் லக்கியஸ்ட் பர்சன்… பிக்பாஸில் எமோஷ்னலாக பேசிய தன்யா – வைரலாகும் வீடியோ!
பிக் பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Nov 2026 10:29 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி தொடங்கி தற்போது 80 நாட்கள் முடிவடைந்து தற்போது 81-வது நாளை எட்டியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 24 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். தொடர்ந்து இதுவரை 11 வாரங்கள் முடிவடைந்த நிலையில் வீட்டில் 8 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். மேலும் கடந்த 3 வாரங்களாக பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடர்ந்து டபுள் எவிக்‌ஷன் நடைப்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 12-வது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஃபேமிலி வீக் டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. முந்தைய சீசன்களில் இந்த டாஸ்கின் போது ஃப்ரீஸ் டாஸ்க் வழங்கப்படும் அது மிகவும் ஃபன்னாக இருக்கும். ஆனால் இந்த சீசனில் அந்த ஃப்ரீஸ் டாஸ்க் கொடுக்காதது சற்று சலிப்பை மூட்டும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஃபேமிலி வாரத்தில் இதுவரை 4 போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று இரண்டு போட்டியாளர்களின் குடும்பமும் நாளை இரண்டு போட்டியாளர்களின் குடும்பமும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் எமோஷ்னலாக பேசிய தன்யா – வைரலாகும் வீடியோ:

மேலும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்று 81-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் போட்டியாளர் தன்யாவின் குடும்பத்தினர் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளது தெரிகிறது. மேலும் இந்த வீடியோவில் தன்யா தனது குடும்பத்தினர் குறித்து குறிப்பாக தனது தந்தை குறித்து மிகவும் எமோஷ்னலாக பேசுகிறார். அது பார்வையாளர்களிடையே கண்கலங்க வைக்கும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… Trisha: ரவி மோகன் எனக்கு எப்போதுமே அப்படிதான் – திரிஷா பகிர்ந்த விஷயம்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் தனது சகோதரன் குறித்து நெகிழ்ந்து பேசிய பிரித்வி… வைரலாகும் வீடியோ!

Follow Us