AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸிடம் செல்லமாக சண்டை போட்ட அன்சரின் மகள்… வைரலாகும் கியூட் வீடியொ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 12-வது வாரம் ஃபேமிலி வாரம் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று வீட்டிற்குள் வந்த அன்சரின் குடும்பத்தினர் கியூட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸிடம் செல்லமாக சண்டை போட்ட அன்சரின் மகள்… வைரலாகும் கியூட் வீடியொ!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Nov 2026 13:04 PM IST

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சி தமிழ் மொழியில் ஒளிபரப்பானதில் இருந்தே தொடர்ந்து மக்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சி 9 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பானது போலவே இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சியும் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து 11 வாரங்கள் முடிவடைந்து தற்போது 12-வது வாரம் சென்று கொண்டு இருக்கின்றது. அதன்படி மொத்தம் 24 பேர் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸில் ஃபேமிலி வாரமாக சென்றுகொண்டு இருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியில் நேற்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டிற்குள் வினோத் பாபு மற்றும் லக்‌ஷ்மி பிரியாவின் குடும்பத்தினர் வருகை தந்தனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் போட்டியாளர்கள் பிரித்விநாத் மற்றும் அன்சரின் குடும்பத்தினர் வருகை தரும் வீடியோ தொடர்ந்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸிடம் செல்லமாக சண்டை போட்ட அன்சரின் மகள்:

அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்றைய நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அன்சரின் மனைவி மற்றும் குழந்தைகள் வந்துள்ளது தெரிகிறது. இதில் அன்சரின் மகள் பிக்பாஸிடம் கியூட்டாக பேசுவதும், அவரிடம் செல்லமாக சண்டை போடும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிம்புவின் கேரக்டர் இதுவா? வைரலாகும் தகவல்

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… Shruti Haasan: சூர்யாவுடன் முதல் படம்.. அற்புதமான தமிழ் அறிமுகம் அது எனக்கு – ஸ்ருதிஹாசன் பேச்சு!

Follow Us