AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Trisha: ரவி மோகன் எனக்கு எப்போதுமே அப்படிதான் – திரிஷா பகிர்ந்த விஷயம்!

Trisha And Ravi Mohan Friendship: திரைத்துறையில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக படங்களில் பணியாற்றிவருபவர் நடிகை திரிஷா கிருஷ்ணன். இவர் சில ஆண்டுகளுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தனக்கும் நடிகர் ரவி மோகனுக்கும் உள்ள உறவு மற்றும் நட்பு குறித்து பேசியுள்ளார்.

Trisha: ரவி மோகன் எனக்கு எப்போதுமே அப்படிதான் – திரிஷா பகிர்ந்த விஷயம்!
ரவி மோகன் மற்றும் திரிஷாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 25 Nov 2026 08:22 AM IST

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக நடித்து, சினிமாவில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக படங்களில் நடித்துவருபவர் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் தமிழில் வெளியாகியிருந்த திரைப்படம் கருப்பு (Karuppu Movie). நடிகர் சூர்யாவுடன் (Suriya) கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தில் திரிஷா இணைந்து நடித்திருந்தார். இதில் நடிகை திரிஷா, கருப்பசாமியாக இருக்கும் சூர்யாவுடன் இணை கதாபாத்திரமாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் 2026ம் ஆண்டில் எந்த படங்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில் மேலும் புதிய திரைப்படங்களில் நடிப்பதற்கு இவர் ஒப்பந்தமாகிவருவதாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் சில வருடத்திற்கு முன் பேட்டி ஒன்றில் பேசியிருந்த நடிகை திரிஷா கிருஷ்ணன், நடிகர் ரவி மோகனுடையான (Ravi Mohan) தன்னுடைய உறவு மற்றும் நட்பு குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: நட்புக்காக படத்தின் முதல் சாய்ஸ் சரத்குமார் கிடையாது – தயாரிப்பாளர் விளக்கம்

ரவி மோகன் பற்றி நடிகை திரிஷா கிருஷ்ணன் பகிர்ந்த விஷயம்:

அந்த நேர்காணலில் தொகுப்பாளர் திரிஷாவிடம், ரவி மோகனை நீங்கள் எப்போதெல்லாம் சந்தீப்பீர்கள் அவர் உங்களுக்கு எப்படிப்பட்ட நண்பர் என கேட்டிருந்தார். உடனே பேசிய திரிஷா, ர”வி மோகன் எனக்கு மிகவும் நெருக்கமானவர். ஒரு ப்ரோ போல.. அவருடன் நான் அடிக்கடி பேசியிருக்கிறேன். ஒரு நண்பராக இருந்து குடும்பமாக நபரை போல அவர் எனக்கு. நானும் அவரின் மனைவியும் (ஆர்த்தி ரவி) மிக மிக நெருக்கமானவர்கள். அதனால் அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்” என அதில் அவர் கூறியிருந்தார்.

நடிகை திரிஷாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

நடிகை திரிஷாவின் நடிப்பில் கிட்டத்தட்ட இரு திரைப்படங்கள் உருவாக்கி இன்னும் வெளியாகாமல் உள்ளது. மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுடன் ராம் என்ற படமானது 2020ம் ஆண்டிலே உருவான நிலையில், இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இதையும் படிங்க: வட சென்னை படம்தான் எனது பெரிய இன்வெஸ்மென்ட் – வெற்றிமாறன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

அதே போல தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்த விஸ்வம்பரா என்ற படமும் 2025ம் ஆண்டிலே தயாரான நிலையில், அதுவும் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதற்க்கு பிறகு இயக்குநர் மோகன் ராஜாவின் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் 31வது படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா இணைவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us