Vetri Maaran: வட சென்னை படம்தான் எனது பெரிய இன்வெஸ்ட்மென்ட் – வெற்றிமாறன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
Vetri Maaran Unpacks Vada Chennai Legacy: தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்டுவரும் திரைப்படங்களை இயக்கிவருபவர் இயக்குநர் வெற்றிமாறன். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், வட சென்னை படத்தின் முதலீடு மற்றும் அதன் கதை எழுத தொடங்கியது குருத்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட ரசிகர்களிடையே போற்றப்படும் பிரபல இயக்குநராக இருந்துவருபவர் வெற்றிமாறன் (Director Vetri Maaran). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக கடந்த 2024ம் ஆண்டில் வெளியான விடுதலை பார்ட் 2 (Viduthalai Part 2) படத்தை இயக்கியிருந்தார். இதில் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) ஹீரோவாக நடித்திருந்த நிலையில், ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு, சிலம்பரசனுடன் (Silambarasan) அரசன் திரைப்படத்தில் (Arasan Movie) இணைந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடந்துவருகிறது. இப்படத்துடனே ராஜன் வகையறா (Rajan Vagaiyaraa) என்ற திரைப்படத்தையும் வெற்றிமாறன் இயக்கிவருகிறாராம் . இதில் அமீர் மற்றும் இளம் ராஜனாக கென் கருணாஸ் நடித்துவருகிறார்கள்.
இந்நிலையில் அரசன் திரைப்படம் மற்றும் ராஜன் வகையறா என இரு படங்கள் விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டுவருகிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் வெற்றிமாறன் கலந்துகொண்டார். அதில் தனது சினிமா வாழ்க்கையில் அதிக முதலீடு போட்டு எழுதிய கதை என்ன என்பது குறித்து தெரிவித்திருக்கிறார்.




இதையும் படிங்க: பிக் பாஸில் முதல் ஆளாக வந்த வினோத் பாபு பேமிலி – மனைவி கொடுத்த அட்வைஸ்!
தனது சினிமா வாழ்க்கையிலே அதிகம் முதலீடு போட்டு எழுதிய கதை குறித்து வெற்றிமாறன்:
அந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் அதில், “வட சென்னை திரைப்படம்தான்தான், எனது மிகப்பெரிய முதலீடு என்று சொல்வேன். ஏனென்றால் நான் 2003-லேயே அதன் கதையை எழுதத் தொடங்கிவிட்டேன். வட சென்னை படத்தைத் தவிர, அதன் பிறகு நான் இயக்கிய ஒவ்வொரு படமும், நான் வட சென்னைக்காக முதலில் எழுதிய கதையிலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டவையே.
இதையும் படிங்க: ஃபகத் பாசில் – பிரேம் குமார் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் அப்டேட் இதோ!
அந்த படமானது வெளியாகி, எட்டு ஆண்டுகள் கடந்த பிறகும், மக்கள் இன்னும் இந்த உலகத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். கதை இன்னும் முழுமையடையவில்லை என்பதுதான் முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பார்க்க பார்வையாளர்கள் இன்னும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்தக் கதையின் மீது மக்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
வட சென்னை திரைப்படம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் பேசிய வீடியோ பதிவு:
Question: When it comes to investment management and portfolio, what would you consider your biggest investment?
Director #Vetrimaaran: I would say #VadaChennai is my biggest investment because I started writing it back in 2003. Every film I’ve made since then, other than Vada Chennai, has been inspired by or drawn from something I originally wrote for Vada Chennai.
Even after eight years, people still want to know more about this world. I think the main reason is that the story isn’t complete yet. That’s why audiences are still interested in seeing what happens next.
I’m very happy that people continue to show interest in this story. I’m sure this investment will pay off big time because, for me, this is our answer to the Avengers — our very own cinematic universe
Let’s go! I don’t know whether I should feel happy or sad https://t.co/oFGW1R5emv
— Movie Tamil (@_MovieTamil) November 23, 2026
இயக்குநர் வெற்றிமாறன் தற்போது அரசன் மற்றும் ராஜன் வகையறா என்ற இரு படங்களையும், வடசென்னை படத்தின் அடுத்தடுத்த பாகங்களாக உருவாக்கிவருகிறார். இந்த கதையெல்லாம் வடசென்னை படம் நடந்த டைம் லைனில் மற்றும் அதற்க்கு முந்தைய கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறதாம். இப்படங்கள் 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் பேக் டூ பேக் வெளியாக காத்திருப்பதாக கூறப்படுகிறது.