AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை – பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம் – திருநெல்வேலியில் பரபரப்பு

Hospital Medical Negligence : திருநெல்வேலியை சேர்ந்த ஷேக் அப்துல் என்பவரின் மகன் ரஹீமுக்கு திருநெல்வேலி (Tirunelveli) அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் வலது காலுக்கு பதிலாக இடது காலில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவனின் 2 கால்களும் பாதிக்கப்பட்டதால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகவுள்ளதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை – பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம் – திருநெல்வேலியில் பரபரப்பு
அரசு மருத்துவமனை
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Nov 2026 11:28 AM IST

திருநெல்வேலி, நவம்பர் 24 : திருநெல்வேலியை சேர்ந்த ஷேக் அப்துல் என்பவரின் மகன் ரஹீமுக்கு திருநெல்வேலி (Tirunelveli) அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் வலது காலுக்கு பதிலாக இடது காலில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவனின் 2 கால்களும் பாதிக்கப்பட்டதால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகவுள்ளதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பள்ளி மாணவனுக்கு வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதிசியைச் சேர்ந்த எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வரும் ஷேக் அப்துல் என்பவரது மகன் ரஹீம். 15 வயதாகும் இவர் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வாகன விபத்தில் ரஹீமின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருநெல்வில அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வலது காலின் மூட்டு பகுதியில் ஜவ்வு விலகியிருப்பதாகவும் மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

இதையும் படிக்க : “அதிர்ச்சி அளிக்கிறது!”.. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது உடனடி சட்ட நடவடிக்கை தேவை.. மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்!

இதனையடுத்து நவம்பர் 23, 2026 நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை முடிந்து அழைத்து வரப்பட்ட ரஹீமை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். வலது காலில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை இடது காலில் சய்யப்பட்டிருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து மருத்துவரிம் ரஹீமின் பெற்றோர் புகார் அளித்தபோது டென்ஷனில் மாற்றி அறுவை சிகிச்சை செய்ததாக அலட்சியமாக தெரிவித்தகாக கூறப்படுகிறது.

மருத்துவர்கள் அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம்

இதுகுறித்து மருத்துவமனை டீனிடம் புகாரளித்தும் தற்போது வரை உரிய பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடது காலில் போடப்பட்டிருந்த கட்டுகளை மருத்துவர்கள் அவசர அவசரமாகப் பிரித்ததால், மாணவன் ரஹீம் வலியால் அவதியடைந்துள்ளார். இதனையடுத்து தவறு செய்த மருத்துவர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்தத் தவறுக்கு பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட மருத்துவர்களே தனது மகனை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து மேல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மாற்றி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் புகாரில் மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும். அந்த குழுவினர் விரைவில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : இருவேறு மதங்களை சேர்ந்தவர்களின் திருமணம்… இந்து திருமண சட்டம் – சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

விசாரணைக்கு பின் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்களின் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளி மாணவனின் உடல் நலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார். பள்ளி மாணவனின் வலது காலுக்கு பதிலாக இடது காலில் நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us