AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருநெல்வேலியில் நாளை மின் தடை.. எங்கெங்கு தெரியுமா? முழு விவரம் இதோ!

Tirunelveli Power Cut : திருநெல்வேலி மாவட்டத்தில் கிராப்புறம் மற்றும் வள்ளியூர் பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், எந்தெந்த இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என்பன உள்ளிட்ட முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

திருநெல்வேலியில் நாளை மின் தடை.. எங்கெங்கு தெரியுமா? முழு விவரம் இதோ!
நெல்லையில் மின் நிறுத்தம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 12 Oct 2026 16:35 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமப்புற கூட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை செவ்வாய்க்கிழமை ( அக்டோபர் 13- ஆம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வள்ளியூர் மற்றும் விஜயாபதி துணை மின் நிலையங்களில் நாளை செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக மேற்கண்ட துணை மின் நிலையங்களில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக, கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதில்,

மேலும் படிக்க: ஈரோட்டில் பெரும் சோகம்.. சகோதரிக்கு வாட்ஸ் ஆப்பில் மெசெஜ் அனுப்பிவிட்டு… குழந்தையுடன் தந்தை விபரீத முடிவு!

வள்ளியூர் பகுதிகளில் மின் தடை

  • வள்ளியூர்.
  • சமாதானபுரம்.
  • கிழவனேரி.
  • வடலிவிளை.
  • செம்பாடு.
  • ஏர்வாடி.
  • தெற்கு வள்ளியூர்.
  • திருக்குறுங்குடி.
  • உதயத்தூர்.
  • கூத்தங்குழி.
  • சிதம்பரபுரம்.
  • முருகானந்தபுரம்.
  • இளைய நயினார் குளம்.
  • பரமேஸ்வரபுரம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

நெல்லை கிராமப்புற பகுதிகளில் மின் தடை

இதேபோல, திருநெல்வேலி கிராமப்புற கூட்டங்களில் நாளை செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக நெல்லை கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சீதபற்பநல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக மேற்கண்ட துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்பட உள்ளது. இதில்,

  • சீதபற்பநல்லூர்.
  • புதூர்.
  • சுப்பிரமணியபுரம்.
  • சிறுக்கன்குறிச்சி.
  • உகந்தான் பட்டி.
  • சமத்துவபுரம்.
  • வல்லவன் கோட்டை.
  • காங்கேயன்குளம்.
  • முத்தன் குளம்.
  • வெள்ளாளங்குளம்.
  • நாலான் குறிச்சி.
  • மாறாந்தை.
  • கல்லத்திகுளம்.
  • கீழ கரும்புள்ளியூத்து ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

மின்துறை ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு வேண்டும்

எனவே, இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வணிகர்கள், தொழில் முனைவோர்கள் ஆகியோர் தங்களது பணிகளை மின் நிறுத்தத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு மின்துறை ஊழியர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திருவள்ளூரில் சோக சம்பவம்.. கோபத்தில் விஷம் குடித்த மனைவி.. அதே விஷத்தை குடித்த கணவன்.. அடுத்தடுத்து பிரிந்த உயிர்!

Follow Us