AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இடைத்தேர்தலில் வெற்றி.. மரகதம் குமரவேல்- சத்தியபாமா எம்எல்ஏ-வாக பதவி ஏற்பு!

Maragatham Kumaravel Sathyabama Take Oath : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் இன்று எம்எல்ஏக்களாக பதவியேற்றனர் .

இடைத்தேர்தலில் வெற்றி.. மரகதம் குமரவேல்- சத்தியபாமா எம்எல்ஏ-வாக பதவி ஏற்பு!
எம்எல்ஏ-வாக பதவியேற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 12 Oct 2026 10:40 AM IST

தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 6- ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இதை தொடர்ந்து, கடந்த 9- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இதை தொடர்ந்து, தேர்தல் அலுவலர்களிடம் வெற்றி சான்றிதழ் பெற்ற நிலையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்கும் விழா தலைமைச் செயலகத்தில் இன்று திங்கள்கிழமை ( அக்டோபர் 12- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் முன்னிலையில் மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏவாக மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதி எம்எல்ஏவாக சத்யபாமாவும் உறுதிமொழி ஏற்று பதவியேற்றனர்.

சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்ததன் பின்னணி

இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், கே. ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆன இவர்கள் கட்சியில் ஏற்பட்ட அதிருப்திகரமாக தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்ததுடன், அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இவர்களை தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த மேலும் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதன் காரணமாக முதல்வர் விஜய் ராஜினாமா செய்த தொகுதியும் சேர்த்து 7 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: பரமக்குடி முதல் பழனி வரை… பிரதமர் மோடி திறந்து வைத்த 5 மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் – என்ன ஸ்பெஷல்?

மதுராந்தகம், தாராபுரத்தில் 5 முனைப்போட்டி

இதைத் தொடர்ந்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு மற்றும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலில் அறிவித்தது. மற்ற 5 தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதன் காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து, இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம், மக்கள் சந்திப்பு உள்ளிட்ட பணிகளில் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதனால், இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவியது. அதிலும், குறிப்பாக தவெக வேட்பாளர்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோரை சில பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பிரச்சாரம் மேற்கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

தவெகவின் எம்எல்ஏக்கள் பலம் 109- ஆக அதிகரிப்பு

அத்துடன், அரசியல் லாபத்துக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர். இதனால், இவர்களின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தான், மரகதம் குமரவேல் 74,048 வாக்குகளும், சத்தியபாமா 66,841 வாக்குகளும் வெற்றி பெற்றனர். இதன் மூலம் சட்டப்பேரவையில் தமிழக வெற்றி கழக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 109- ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பெண்களுக்கு குட் நியூஸ்.. தமிழகத்தில் வாரந்தோறும் ‘சிங்கப்பெண்’ கடன் சிறப்பு முகாம்கள்.. முழு விவரம்!!

Follow Us