AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெண்களுக்கு குட் நியூஸ்.. தமிழகத்தில் வாரந்தோறும் ‘சிங்கப்பெண்’ கடன் சிறப்பு முகாம்கள்.. முழு விவரம்!!

Singappenn Loan Scheme: தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வாரந்தோறும் சிறப்பு கடன் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதில் 'சிங்கப்பெண்' கடன் திட்டம், வீட்டு வசதி மற்றும் விவசாயக் கடன்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு குட் நியூஸ்.. தமிழகத்தில் வாரந்தோறும் ‘சிங்கப்பெண்’ கடன் சிறப்பு முகாம்கள்.. முழு விவரம்!!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 12 Oct 2026 10:20 AM IST

அக்டோபர், 12: தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையிலும், சிறு குறு தொழில்கள், விவசாயம் மற்றும் சுயதொழில் தொடங்குவோருக்கு எளிதில் நிதி உதவி வழங்கும் வகையிலும் கூட்டுறவுத்துறை பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஒட்டுமொத்தமாக ரூ.1,80,000 கோடி அளவுக்குப் பல்வேறு வகையான கடன்களை வழங்குவதற்குத் தமிழக அரசு பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கு தகுதியான பயனாளிகளை முழுமையாகச் சென்றடையும் நோக்கில், தமிழகம் முழுவதும் வாரந்தோறும் சிறப்பு கடன் முகாம்கள் மற்றும் கடன் மேலாண்மை முகாம்கள் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சூப்பர் எல்நினோ வெப்பம்.. குறையும் நிலத்தடி நீர்மட்டம்.. தமிழகத்திற்கு முக்கிய எச்சரிக்கை

சிறப்பு முகாம்களும், திட்டங்களும்:

கூட்டுறவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு முகாம்கள் வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் திட்டமிடப்பட்டு நடத்தப்படவுள்ளன. இதன்படி, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பெண்களுக்கான ‘சிங்கப்பெண்’ கடன் திட்டங்கள் மற்றும் வீட்டு வசதி கடன்களுக்கான சிறப்பு முகாம்கள் பிரத்யேகமாக நடத்தப்படும். மேலும், வாரத்தின் மற்ற நாட்களான வெள்ளிக்கிழமைகளில் விவசாயக் கடன்கள், ஊரகத் தொழில் கடன்கள், வீட்டு அடமானக் கடன்கள், மாட்டுத் தீவனக் கடன்கள், திருநங்கைகளுக்கான சிறப்புக் கடன்கள், மின் ஆட்டோ வாங்கும் கடன்கள் மற்றும் பிற முன்னுரிமைத் துறை கடன்களை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களின் வழிகாட்டுதலின்படி, அந்தந்தப் பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்த முகாம்கள் ஒருங்கிணைக்கப்பட்டுச் செயல்படுத்தப்படவுள்ளன.

தேவையான ஆவணங்கள், தொடர்பு எண்கள்:

இந்தச் சிறப்பு கடன் முகாம்களில் கலந்துகொண்டு கடன் பெற விரும்பும் தகுதியான பொதுமக்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் தொழிலுக்கான அல்லது தேவையான உரிய ஆவணங்களுடன் தங்களுக்கு அருகிலுள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சிறப்பு முகாம்கள் மற்றும் கடன்கள் குறித்த கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காகத் தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் பிரத்யேகத் தொலைபேசி எண்ணும் (9884000845) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களுக்குத் தேவையான சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: காவல் நிலையத்திலேயே பைக்குகள் திருட்டு – போலீஸ் உட்பட 3 பேர் கைது… சென்னையில் பரபரப்பு

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்:

தமிழக அரசு மற்றும் கூட்டுறவுத்துறையின் இந்த அதிரடியான முன்னெடுப்பானது, நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் சுயதொழில் முனைவோருக்கு மாபெரும் வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தரகர்களின்றி எளிமையான முறையில் கூட்டுறவு வங்கிகள் மூலமாகப் பெறப்படும் இந்தக் கடன் உதவிகளைப் பயன்படுத்திப் பொதுமக்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Follow Us