AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கடலூரில் பயங்கரம்.. வழக்கறிஞர் நலச்சங்க தலைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்!

Cuddalore Crime : கடலூர் மாவட்டத்தில் வழக்கறிஞர் நலச்சங்கத்தின் தலைவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இது தொடர்பாக காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூரில் பயங்கரம்.. வழக்கறிஞர் நலச்சங்க தலைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்!
வழக்கறிஞர் தங்க விக்ரம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 10 Oct 2026 21:20 PM IST

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கக்கன் நகரை சேர்ந்தவர் தங்க விக்ரம் ( 40 வயது). இவர், காட்டுமன்னார்கோவில் வழக்கறிஞர் நலச் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். அத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்த நிலையில், அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கறிஞர் தங்க விக்ரம் அந்த பகுதியில் உள்ள செட்டி தெருவில் உள்ள டீ கடைக்கு டி அருந்துவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதில், வழக்கறிஞர் தங்க விக்ரம் பலத்த வெட்டு காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார்.

அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதி

இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கறிஞர் தங்க விக்ரமை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்த நிலையில் தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: கிரிப்டோவில் முதலீடு செய்தால் லட்சாதிபதி ஆகிடுவீங்க.. ஆசை காட்டி மோசம் செய்த கும்பல்.. விழுப்புரத்தில் இருவர் கைது!

காட்டுமன்னார்கோவில் போலீசார் தீவிர விசாரணை

அங்கு, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் குடும்பத்தினர் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், வழக்கறிஞரை வெட்டிய மர்ம நபர்கள் யார்… எதற்காக இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர் என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு

மேலும், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுவதால் சேத்தியாதோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் ராமலிங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு இருந்தார். வழக்கறிஞர் நலச்சங்கத்தின் தலைவர் வெட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: பெண் தர மறுத்ததால் ஆத்திரம்.. சிறுமி வீட்டில் நள்ளிரவில் குண்டு வீச்சு.. நெல்லையில் பரபரப்பு சம்பவம்!

Follow Us