AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.842 கோடியில் புதுப்பிக்கப்படும் சென்னை எழும்பூர் ரயில் நிலையம்! விமான நிலையத்திற்கு இணையான நவீன வசதிகள்..

Egmore Railway Station Renovation: எழும்பூர் ரயில் நிலையத்தின் அடையாளமாக விளங்கும் 1908ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான பாரம்பரியக் கட்டடம் இடிக்கப்படாது என ரயில்வே நிர்வாகம் உறுதியளித்துள்ளது. அதன் கோபுரங்கள் மற்றும் பாரம்பரியக் கட்டடக் கலை அம்சங்கள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,.

ரூ.842 கோடியில் புதுப்பிக்கப்படும் சென்னை எழும்பூர் ரயில் நிலையம்! விமான நிலையத்திற்கு இணையான நவீன வசதிகள்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Nov 2026 18:40 PM IST

நவம்பர் 25, 2026: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை ரூ.842 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த நவீன ரயில் நிலையமாக மாற்றும் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய முனையக் கட்டடங்கள், பிரம்மாண்ட நடைமேம்பாலம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளன.

காந்தி இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய இரு பகுதிகளிலும் தரைத்தளத்துடன் மூன்று மாடிகளைக் கொண்ட புதிய முனையக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் காந்தி இர்வின் சாலை பகுதியில் முதல் நடைமேடையை ஒட்டி அமைக்கப்படும் புதிய முனையத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மறுபுறம் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மேலே மற்றொரு முனையம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் மெட்ரோ நிலையத்திலிருந்து நேரடியாக ரயில் நிலையத்திற்குள் செல்லும் வசதி கிடைக்கும்.

72 மீட்டர் அகலத்தில் பிரம்மாண்ட நடைமேம்பாலம்

இரண்டு புதிய முனையங்களையும் இணைக்கும் வகையில் 72 மீட்டர் அகலத்தில் முழுமையாக மேற்கூரையுடன் கூடிய பிரம்மாண்ட நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இது பயணிகள் காத்திருக்கும் அரங்கமாகவும், அனைத்து நடைமேடைகளுக்கும் செல்வதற்கான இணைப்புப் பாதையாகவும் செயல்படும்.

மேலும் படிக்க: 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 150 நாட்களுக்குள் இலவச மிதிவண்டி.. தமிழக அரசு உத்தரவு..

பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் நிலையத்தின் பி1, பி2 நுழைவாயில்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் கட்டுமானப் பணிகள் சற்று தாமதமாக நடைபெறுவதால், முதலில் காந்தி இர்வின் சாலை முனையம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44 லிஃப்டுகள், 31 எஸ்கலேட்டர்கள்

இத்திட்டத்தின் கீழ் இரு பகுதிகளிலும் தனித்தனி வருகை, புறப்பாடு பகுதிகள், விசாலமான காத்திருப்பு அறைகள், சிறப்பு ஓய்வறைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், பயணிகளின் வசதிக்காக 44 லிஃப்டுகள் மற்றும் 31 எஸ்கலேட்டர்கள் நிறுவப்பட உள்ளன.

காந்தி இர்வின் சாலை பகுதியில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் ஏற்கெனவே பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் வாகன நிறுத்துமிடம், பார்சல் அலுவலகம் மற்றும் ரயில்வே அஞ்சல் சேவைக்கான கட்டடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் – கனிமொழி வலியுறுத்தல்

பாரம்பரியக் கட்டடம் பாதுகாக்கப்படும்

எழும்பூர் ரயில் நிலையத்தின் அடையாளமாக விளங்கும் 1908ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான பாரம்பரியக் கட்டடம் இடிக்கப்படாது என ரயில்வே நிர்வாகம் உறுதியளித்துள்ளது. அதன் கோபுரங்கள் மற்றும் பாரம்பரியக் கட்டடக் கலை அம்சங்கள் பாதுகாக்கப்படும். அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த பிறகு, பழமையும் புதுமையும் இணைந்த நவீன ரயில் நிலையமாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us