AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Rains: தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் தொடரும் மழை.. எத்தனை நாட்களுக்கு?

Rainfall Alert: திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 24 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

Tamil Nadu Rains: தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் தொடரும் மழை.. எத்தனை நாட்களுக்கு?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Nov 2026 14:35 PM IST

நவம்பர் 25, 2026: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக அடுத்த 6 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் மன்னார் வளைகுடா முதல் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (நவம்பர் 25): 24 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 24 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றாததற்கு காரணம்? – உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக்கோரிய மாவட்ட ஆட்சியர்

நாளை (நவம்பர் 26): 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 27: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம், கடலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்களிலும் காரைக்காலிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் – புகார் வந்தது எப்போது? டிஜிபி விளக்கம்

நவம்பர் 28:

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 29:

நீலகிரி, கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1:

நவம்பர் 30ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

டிசம்பர் 1ஆம் தேதி வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட உள் தமிழகத்தில் லேசான மழையும், தென் தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.

சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (நவம்பர் 25) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

 

Follow Us