AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றாததற்கு காரணம்? – உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக்கோரிய மாவட்ட ஆட்சியர்

Thiruparankundram Deepam Row : திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற முடியாததற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மன்னிப்பு கோரினார். உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 25, 2026 இன்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செயத ஆட்சியர், தூணில் தீபம் ஏற்ற மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றாததற்கு காரணம்? – உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக்கோரிய மாவட்ட ஆட்சியர்
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 25 Nov 2026 13:21 PM IST

மதுரை, நவம்பர் 25 : திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற முடியாததற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் (Madurai District Collector) நிஷாந்த் கிருஷ்ணா மன்னிப்பு கோரினார். உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 25, 2026 இன்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செயத ஆட்சியர், தூணில் தீபம் ஏற்ற மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. கோயில் தேவஸ்தானத்தின் அங்கீகாரம் பெறவும் முயற்சி நடந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக்கோரிய மாவட்ட ஆட்சியர்

திருப்பரங்குன்றம் தீப வழக்கை கடந்த நவம்பர் 20, 2026 விசாரித்த உச்சநீதிமன்றம் வருகிற நவம்பர் 24, 2026 அன்று மட்டும் சர்ச்சைக்குரிய சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்தது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் நவம்பர் 23, 2026 நேற்று சர்ச்சைக்குரிய சர்வே கல் தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

இதையும் படிக்க : தங்கத்தில் ரீனியம் உலேகப் பொடி கலப்பது உண்மையா? அப்படி கலந்திருந்தால் என்ன செய்வது.. நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விளக்கம்!

அமைச்சர் நிர்மல்குமாரின் பதிவு

 

இது தொடர்பாக பதிவிட்டுள்ள அமைச்சர் நிர்மல் குமார், திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். இது பல்வேறு தரப்பினரிடையே ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்று வருகிறது. மற்றொரு பக்கம் உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மீறியுள்ளதாக குற்றச்சாடடு தெரிவித்து வருகின்றனர்.

தீபத்தூணில் தீபம் ஏற்றாததற்கு காரணம் இதுதான்

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நவம்பர் 25, 2026 இன்று முதல்கட்ட நிலவர அறிக்கை தாக்கல் செய்தார். அதில், நவம்பர் 22, 2026 அன்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் 2 கடிதங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டன. முதல் கடிதம் திருப்பரங்குன்றம் கோவில் தேவஸ்தானத்துக்கும், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் மற்றும் கோவில் செயல் அலுவலருக்கும் அனுப்பப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவின் படி, நவம்பர் 24, 2026 அன்று தீபத்தூணில் தீபம் ஏற்றும் பணியை தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் அடங்கிய குழுவினர் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேவஸ்தானம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும், இதர அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தேவஸ்தானத்துக்கும் கோவில் செயல் அலுவலருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இரண்டாவது கடிதம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டது. கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால், இந்த விவகாரத்தில் ஆணையர் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நவம்பர 24, 2026 அன்று இரவு 8.30 மணியளவில் கோவில் செயல் அலுவலர் அறிக்கை ஒன்றை வழங்கினார். அதில் நவம்பர் 24, 2026 அறங்காவலர் குழு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, மாலை 6 மணியளவில் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே அமைந்துள்ள தீப மண்டபத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

இதையும் படிக்க : 70 வயது நிரம்பிய முதியவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

காலங்காலமாகப் பின்பற்றப்படும் நடைமுறையின்படி, மூலவரின் தலைக்கு நேர் மேலே மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே அமைந்துள்ள தீப மண்டபத்தில்தான் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவை நல்லெண்ணத்துடன் நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீதிமன்றத்தின் எந்த அறிவுறுத்தலையும் நான் வேண்டுமென்றோ, திட்டமிட்டோ மீறவில்லை.தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow Us