AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

1,00,800 விளக்குகளால் சிவலிங்க வடிவில் மகா தீபம்.. ஈஷா ஆதியோகி திருவுருவமும் ஜொலித்தது.. பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

100800 Lamps Lit Shape Shiva Lingam : கோவையில் சுமார் 1 லட்சத்து 800 விளக்குகளால் சிவலிங்கம் வடிவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. இதேபோல, ஈஷா யோக மையத்தில் ஆதியோகி திருவுருவமும் தீப விளக்குகளால் ஜொலித்தது .

1,00,800 விளக்குகளால் சிவலிங்க வடிவில் மகா தீபம்.. ஈஷா ஆதியோகி திருவுருவமும் ஜொலித்தது.. பக்தர்கள் சிறப்பு வழிபாடு!
100800 தீப விளக்குகளால் சிவலிங்கம் வடிவம்.
Sekaran S
Sekaran S | Published: 25 Nov 2026 10:50 AM IST

கோவை ஒன்னிபாளையம் எல்லை கருப்பராயன் கோவிலில் 1,00,800 விளக்குகளால் சிவலிங்க வடிவில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டம், ஒன்னிபாளையத்தில் அருள்மிகு எல்லை கருப்பராயன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் விமர்சையாகவும், பிரம்மாண்டமாகவும் கொண்டாடப்பட்டது. இதில், 1008 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்று ஒரு லட்சத்து 800 விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். இந்த விளக்குகள் சிவலிங்கம் வடிவில் அலங்கரித்து ஏற்றப்பட்டிருந்தது. ஆன்மீக நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

சிவலிங்க வடிவில் 1,00,800 தீப விளக்குகள் ஏற்றம்

சிவலிங்க வடிவில் ஆயிரக்கணக்கான தீபங்கள் ஒரே நேரத்தில் சுடர்விட்டு பிரகாசித்தது பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியதுடன், கோவில் வளாகம் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதந்தது. சிவலிங்க வடிவில் தீபங்கள் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, அதற்கான சிறப்பு ஆகம வழிபாட்டு சடங்குகளும், மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டன. இந்த பிரம்மாண்ட நிகழ்வின் முழுமையான அழகை காட்டும் வகையில் ட்ரோன் கேமரா மூலமாக வானில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சிகள், பக்தர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்க: கார்த்திகை மாதக் கனவுகளில் ஒளிந்திருக்கும் ஐந்து அதிர்ஷ்ட அறிகுறிகள்

கோவை ஈஷா யோக மையத்தில் கார்த்திகை வழிபாடு

இதே போல, கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள ஆதியோகி திருவுருவம் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகளின் ஒளியில் ஜொலித்தது. ஈஷா யோகா மைய வளாகத்தில் அமைந்துள்ள தியானலிங்கம், நந்தி, சூரிய குண்டம் மண்டபம், லிங்க பைரவி வளாகங்களிலும் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதேபோல, வெள்ளியங்கிரி 7- ஆவது கிரிமல்டி தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக சுயம்பு லிங்கத்துக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகரா முழக்கத்துடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு

திருச்சி, வயலூர் முருகப்பெருமான் கோவிலில் கார்த்திகை திருநாள் அன்று சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடைபெற்றது. நிகழ்வில், வள்ளி தெய்வானை சமேதரராக காட்சி தந்த முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை தீபாராதனை காண்பிக்கப்பட்டு சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடைபெற்றது. அத்துடன், ஸ்ரீரங்கம் கோவிலிலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சந்தன மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைந்தார்.

மேலும் படிக்க: சபரிமலை பக்தர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு… ஆன்லைன் முன்பதிவில் அதிரடி மாற்றம்!

Follow Us