AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

2 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைவு – இன்றைய நிலவரம் என்ன?

Gold and Silver Price Update : கடந்த இரண்டு நாட்களாகத் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், நவம்பர் 25, 2026 இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது. அதன்படி நவம்பர் 24, 2026 நேற்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.115 உயர்ந்து ரூ.11,715க்கு விற்பனை செய்யப்பட்டது.

2 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைவு – இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Nov 2026 10:29 AM IST

கடந்த 2 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, நவம்பர் 25, 2026 இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.2,360 குறைந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்களுக்கு இது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. இந்த 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது.

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைவு

இந்த நிலையில் கடந்த நவம்பர் 10, 2026 அன்று முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்தது . குறிப்பாக நவம்பர் 17, 2026 அன்று கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு பிறகு ரூ.1 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது. இதனால், நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் தங்கம் வாங்க சரியான நேரமாக பார்க்கப்பட்டதால் நகைக் கடைகளில் திடீர் விற்பனை அதிகரித்தது.

இதையும் படிக்க : ரூ.1 கோடி வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்கிய பெண்.. ஆண்டுக்கு ரூ.2 கோடி வருமானம் ஈட்டுகிறார்!

இதற்கிடையே, கடந்த நவம்பர் 23, 2026 மற்றும் நவம்பர் 24. 2026 தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. இதனால், தங்கம் விலை மீண்டும் அதிகரிக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாகத் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், நவம்பர் 25, 2026 இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது. அதன்படி நவம்பர் 24, 2026 நேற்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.115 உயர்ந்து ரூ.11,715க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.920 அதிகரித்து ரூ.93,720க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நவம்பர் 25, 2026 இன்று தங்கம் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.295 குறைந்து ரூ.11,420க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.2,360 குறைந்து ரூ.91,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் சுமார் ரூ.2,000 அளவுக்கு உயர்ந்த தங்கம் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : டிசம்பரில் அமலுக்கு வருகிறதா EPFO 3.0 அம்சம்?.. வெளியான முக்கிய தகவல்!

வெள்ளி விலையும் குறைந்தது

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் நவம்பர் 25, 2026 இன்று சரிவைக் கண்டுள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.165க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.10,000 குறைந்து ரூ.1,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிடும் பொதுமக்கள் இன்றைய விலை நிலவரத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Follow Us