AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வேலை Vs சுயதொழில்.. இருவரில் யார் அதிகம் சம்பளம் பெறுகின்றனர்.. அறிக்கை கூறுவது இதுதான்!

Self-Employed vs Salaried Income in India | தங்களது பண தேவையை பூர்த்தி செய்ய பலரும் வேலை அல்லது சுயதொழில் செய்கின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் வேலை செய்பவர்கள், சுய தொழில் செய்பர்கள் இவர்களில் யார் அதிக வருமானம் பெறுகின்றனர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வேலை Vs சுயதொழில்.. இருவரில் யார் அதிகம் சம்பளம் பெறுகின்றனர்.. அறிக்கை கூறுவது இதுதான்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Nov 2026 15:57 PM IST

மனிதர்கள் தங்களது அன்றாட மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு பணம் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக தான் பெரும்பாலான பொதுமக்கள் வேலைக்கு செல்கின்றனர். வேலைக்கு செல்ல முடியாதவர்கள் அல்லது விரும்பமில்லாதவர்கள் சுயதொழில் செய்கின்றனர். இந்த நிலையில் தான், இந்தியாவில் வேலைக்கு செல்வது சிறந்ததா அல்லது சுயதொழில் செய்வது சிறந்ததா என்ற நெடிய விவாதம் நீண்டுக்கொண்டே வருகிறது. எனவே, இந்தியாவில் வேலைக்கு செல்லும் நபர்கள் அதிகமாக வருமானம் ஈட்டுகிறார்களா அல்லது சுயதொழில் செய்யும் நபர்கள் அதிகமாக வருமானம் ஈட்டுகிறார்களா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வேலைக்கு செல்லும் நபர்கள் Vs சுய தொழில் செய்யும் நபர்கள்

இந்தியாவில் சுய தொழில் செய்யும் நபர்களை விடவும், வேலைக்கு செய்யும் நபர்கள் மிக கடுமையாக உழைக்கின்றனர். இருப்பினும் அவர்களது வருமான வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளதாக Periodic Labour Force Survey கூறியுள்ளது. அதாவது, வருமான வளர்ச்சி அடிப்படையில் மாத சம்பளம் வாங்கும் நபர்களின் வருமான வளர்ச்சி தேக்கமடைந்துள்ளது என்றும், சுயமாக தொழில் செய்யும் நபர்களின் வருமான வளர்ச்சி உயர்ந்துவிட்டது என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதையும் படிங்க : சரிவில் தங்கம் விலை.. நகைக் கடன் வாங்கியவர்களுக்கு பெரிய சிக்கல்.. என்ன தெரியுமா?

சுயதொழில் செய்பவர்களின் வருமானம்  அதிரடி உயர்வு

2025 ஆம் ஆண்டு தரவுகளின்படி, நிரந்தர ஊதியம் மற்றும் மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் சராசரி மாத வருமானம் 6.1 சதவீதமாக அதிகரித்து ரூ.26,247 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இதே காலக்கட்டத்தில் சுயதொழில் செய்யும் நபர்களின் சராசரி மாத வருமானம் 8.6 சதவீதம் உயர்வை சந்தித்து ரூ.23,012 ஆக உயர்வை சந்தித்துள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இரண்டு தரப்பினர் இடையே 2.6 சதவீதம் வருமானம் வித்தியாசம் உள்ளது.

இதையும் படிங்க : தொடர் சரிவுக்கு மத்தியில் திடீர் டிவிஸ் கொடுத்த தங்கம்.. இதுக்கும் அமெரிக்கா தான் காரணம்!

தொடர்ந்து மூன்று ஆண்டுகள் முன்னிலை

வருமான வளர்ச்சி வேகத்தில் சுயதொழில் செய்யும் நபர்களே தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முன்னிலையில் உள்ளனர். ஆனால், வருமான வளர்ச்சி மந்தமாக இருந்தாலும் வேலைக்கு செல்லும் நபர்கள் தங்களது பணி இடத்தில் அதிக நேரம் செலவு செய்கின்றனர். இது வேலைக்கு செல்லும் நபர்கள் மற்றும் சுய தொழில் செய்யும் நபர்களின் வருமானத்தில் மேலும் முரண்பாட்டை அதிகரித்துள்ளது.

சமீப காலமாக இளைய தலைமுறையினர் இடையே வேலைக்கு செல்வதை விடவும், சுய தொழில் செய்வதற்கான ஆர்வம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us