AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தங்கம் விலை 2வது நாளாக மீண்டும் உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

கடந்த சில நாட்களாக அதிரடியாக குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. அதன்படி 2வது நாளாக நவம்பர் 24, 2026 இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இந்க நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 வரை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை 2வது நாளாக மீண்டும் உயர்வு  – இன்றைய நிலவரம் என்ன?
கோப்பு புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Nov 2026 10:16 AM IST

கடந்த சில நாட்களாக அதிரடியாக குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. அதன்படி 2வது நாளாக நவம்பர் 24, 2026 இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இந்க நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 வரை உயர்ந்துள்ளது. தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய மீண்டும் ஆர்வம் காட்டினர். இந்த நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருப்பது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை 2வது நாளாக மீண்டும் உயர்வு

கடந்த நவம்பர் 10, 2026 அன்று முதல் தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்தது. குறிப்பாக கடந்த கடந்த ஓராண்டுக்கு பிறகு நவம்பர் 17, 2026 அன்று தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் தங்கம் ஒரு சவரன் ரூ.99,760க்கும், ஒரு கிராம் ரூ.12,470க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே இருந்தது.

இந்த நிலையில் புதிய திருப்பமாக தங்கத்தின் விலை நவம்பர் 23, 2026 நேற்று சவரனுக்கு ரூ. 1080 உயர்ந்து ஒரு சரவன் ரூ.92,800க்கும் கிராமுக்கு ரூ.135 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,600க்கும் விற்பனையானது. வெள்ளி விலையைப் பொறுத்த வரை நவம்பர் 23, 2026 நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.175க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,75,000,க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2வது நாளாக நவம்பர் 24, 2026 இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.115 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11, 715க்கும், சவரனுக்கு ரூ. 920 உயர்ந்து ஒரு சவரனம் ரூ.93, 720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வெள்ளி விலை கிராம் ரூ.175க்கும் கிலோ ரூ.1,75,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஓராண்டுக்கு பிறகு ரூ.1 லட்சத்துக்கும் கீழ் குறைந்த தங்கம் விலை

கடந்த ஓராண்டுக்கும் மேலாக தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்ட நிலையில் கடந்த நவம்பர் 10, 2026 முதல் படிப்படியாக குறைந்து வந்தது. இந்த நிலையில் நவம்பர் 17, 2026 வரலாற்றில் புதிய திருப்பமாக தங்கம் விலை ரூ. 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டனர். கடைகளில் தங்கத்தின் விற்பனை அதிகரிக்கத் துவங்கியது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெரிக்க டாலரின் மதிப்பு, வட்டி விகிதங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் உலகப் பங்குச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது தங்கக் கையிருப்பை அதிகரிப்பதும் உலகச் சந்தையில் தங்கத்தின் விலையைப் பாதிக்கும் மற்றொரு முக்கிய காரணியாக கருதப்படுகிறது.

Follow Us