AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்…

Weekly Horoscope: நவம்பர் 23 முதல் 29 வரை துலாம் முதல் மீனம் வரையிலான ஆறு ராசிக்காரர்களுக்கும் வேலை, தொழில் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. சில ராசிகளுக்கு புதிய வேலை, பதவி உயர்வு, சொத்து மற்றும் வாகனம் வாங்கும் யோகம் அமையலாம். எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பிருந்தாலும், செலவுகள், உடல்நலம் மற்றும் பயணங்களில் கவனம் தேவை.

துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்…
Image Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 24 Nov 2026 10:32 AM IST

நவம்பர் 23 முதல் 29, 2026 வரையிலான இந்த வாரத்தில் துலாம் முதல் மீனம் வரையிலான ஆறு (Six Zodiac Signs) ராசிக்காரர்களுக்கு தொழில், வேலை, குடும்பம் மற்றும் பொருளாதார ரீதியாகப் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சிலருக்கு நீண்டகாலப் பிரச்சினைகள் முடிவுக்கு வருவதுடன், புதிய வேலை, வீடு, வாகனம் மற்றும் சொத்துகள் வாங்கும் வாய்ப்புகளும் உருவாகலாம். இந்த வாரத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

Also Read: புதுமணத் தம்பதி வாழ்வில் அன்பை அள்ளிக் கொடுக்கும் 5 வாஸ்து ரகசியங்கள்!

துலாம் ராசி

தொழில் முன்னேற்றம், பழைய கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு!

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லாபம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையக்கூடும். வேலை, தொழில், வியாபாரம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், நீண்ட நாட்களாக இருந்த கடன் சுமைகளைக் குறைப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இருப்பினும், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வேலை தொடர்பாகச் சிறுசிறு இடையூறுகள் ஏற்படலாம். நரசிம்மர் மற்றும் பெருமாளை வழிபடுவது சிறப்பானதாகக் கூறப்படுகிறது.

விருச்சிகம்

புதிய வேலை, இடமாற்றம், தொழிலில் வளர்ச்சி!

விருச்சிக ராசியினருக்கு வேலை மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். புதிய வேலை தேடுபவர்கள், பணியிட மாற்றத்தை எதிர்பார்ப்பவர்கள் முயற்சிகளில் முன்னேற்றம் காணலாம். பழைய பிரச்சினைகள் படிப்படியாக விலகுவதுடன், பொருளாதார நிலையும் மேம்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். பயணங்களிலும் பணப் பரிவர்த்தனைகளிலும் கவனம் தேவை. பெருமாள் மற்றும் அனுமனை வழிபடுவது நன்மை தரும்.

தனுசு

சொத்து, வாகனம் வாங்கும் யோகம்.. நண்பர்களால் ஆதாயம்!

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும் காலமாக அமையலாம். வேலை, தொழில் மற்றும் குடும்பம் சார்ந்த நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் ஆதாயங்கள் ஏற்படலாம். புதிய வீடு, கார் மற்றும் சொத்துகள் வாங்குவதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுப நிகழ்ச்சிகளுக்கான சூழலும் அமையக்கூடும். உடல்நலத்தில் கால்வலி போன்ற பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டும். விநாயகர் மற்றும் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பாகக் கூறப்படுகிறது.

மகரம்

வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, பொருளாதார வளர்ச்சி!

மகர ராசியினருக்கு இந்த வாரம் வேலை மற்றும் தொழில் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கக்கூடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையலாம். வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், அரசு சார்ந்த சொத்து அல்லது பண ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் செலவுகள் அதிகரிக்கலாம் என்பதால் நிதானம் அவசியம். வாகனங்களில் பயணம் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நரசிம்மரை வழிபடுவது நன்மை தரும்.

கும்பம்

சொத்து சேர்க்கை, அரசு வேலை வாய்ப்பு.. புதிய பொறுப்புகள்!

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டகரமான பலன்கள் கிடைக்கக்கூடும். வீடு மற்றும் நிலம் வாங்குவதற்கான முயற்சிகள் சாதகமாக அமையலாம். அரசு வேலை மற்றும் அரசு ஒப்பந்தங்கள் தொடர்பான வாய்ப்புகளும் உருவாகலாம். பணியிடத்தில் சில சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. ரசாயனப் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கையாளும்போது கூடுதல் கவனம் தேவை. சிவபெருமானை வழிபடுவதும் சிவனுக்கு அபிஷேகம் செய்வதும் சிறப்பானதாகக் கூறப்படுகிறது.

மீனம்

எதிர்பாராத பணவரவு, திடீர் வளர்ச்சி.. தடைகள் விலகும்!

மீன ராசியினருக்கு இந்த வாரம் பொருளாதார ரீதியாகச் சாதகமான பலன்கள் கிடைக்கலாம். எதிர்பாராத பணவரவு, தொழிலில் லாபம் மற்றும் திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுவரை மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள் மற்றும் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையலாம். இருப்பினும், நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் செலவுகள் மற்றும் மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பண விஷயங்களில் கவனம் தேவை. வயிறு மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளைக் கவனித்துக் கொள்வதுடன், இரவு நேரப் பயணங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காமாட்சி அம்மனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் எனக் கணிக்கப்படுகிறது.

Follow Us