தொடர் சரிவுக்கு மத்தியில் திடீர் டிவிஸ் கொடுத்த தங்கம்.. இதுக்கும் அமெரிக்கா தான் காரணம்!
Why Did Gold Price Jump 1480 Rupees | தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று (நவம்பர் 22, 2026) தங்கம் ரூ.1,480 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை சரிவுக்கு காரணம் என்ன என பார்க்கலாம்.
தங்கம் (Gold) கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வந்தது. தங்கம் விலை இத்தகைய தொடர் சரிவை சந்தித்தது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான், இன்று (நவம்பர் 22, 2026) ஒரே நாளில் தங்கம் அதிரடி விலை உயர்வை சந்தித்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, தங்கம் இன்று ஒரே நாளில் ரூ.1,480 உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தங்கம் இத்தகைய திடீர் உயர்வை சந்திக்க காரணம் என்ன, இனி தங்கத்தின் விலை நிலவரம் என்னவாக இருக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம்
தங்கம் கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வந்ததற்கு முக்கிய காரணம் அமெரிக்கா தான். காரணம், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மிக கடுமையான பணவீக்கம் காரணமாக, அந்த நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வந்தது. அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீராக வைத்துக்கொள்ள இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அந்த வங்கி தள்ளப்பட்டதன் காரணமாக இந்த முடிவை எடுத்து வந்தது. அதுவே, தங்கத்தின் விலையில் கடும் சரிவை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக மாறியது.
இதையும் படிங்க : தங்கத்தில் கலப்படம்.. வியாபாரிகள், வாடிக்கையாளர்களுக்கு ஜிஜேசி எச்சரிக்கை!




தங்கம் விலை யு டர்ன் : அமெரிக்கா தான் முக்கிய காரணம்
அமெரிக்க மத்திய வங்கி மேலும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்ப்பார்ப்பில் உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து திசை திரும்பினர். அவர்கள் அமெரிக்காவின் வட்டி விகிதத்தில் கவனத்தை செலுத்தி வந்த நிலையில், தற்போது அமெரிக்கா டிவிஸ்ட் வைத்துள்ளது. அதாவது, அமெரிக்க மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தினால் அமெரிக்க பொருளாதாரம் பெரிய அளவிலான வீழுச்சியை சந்திக்கும் என்று நிதியமைச்சரான ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளதே தற்போதைய டிவிஸ்ட் ஏற்பட காரணமாக உள்ளது.
இதையும் படிங்க : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை பாராட்டிய டிரம்ப்.. அமெரிக்க மத்திய வங்கிக்கு கடும் விமர்சனம்!
இன்றைய தங்கம் மட்டும் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.135 சரிவை சந்தித்து ஒரு கிராம் ரூ.11,600-க்கும், சவரனுக்கு ரூ.1,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,655-க்கும், ஒரு சவரன் ரூ.1,01,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,75,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்த வேண்டாம் என்ற முடிவை எடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால் இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.