AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதலீட்டுத் தரவரிசையில் சீனாவை நெருங்கிய இந்தியா… பிரதமர் மோடி தலைமைத்துவத்துக்கு 2வது இடம்!

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி நிறுவனம் (Lowy Institute) வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டுக்கான ஆசியா பவர் இன்டெக்ஸ் (Asia Power Index) தரவரிசையில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

முதலீட்டுத் தரவரிசையில் சீனாவை நெருங்கிய இந்தியா… பிரதமர்  மோடி தலைமைத்துவத்துக்கு 2வது இடம்!
பிரதமர் மோடி
C Murugadoss
C Murugadoss | Updated On: 23 Nov 2026 14:23 PM IST

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி நிறுவனம் (Lowy Institute) வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டுக்கான ஆசியா பவர் இன்டெக்ஸ் (Asia Power Index) தரவரிசையில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அதிகார வலிமை இடைவெளி 2018-ம் ஆண்டு இந்தத் தரவரிசை தொடங்கியதிலிருந்து இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்கா 78.9 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சீனா 73.6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தியா 40.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் மதிப்பெண் 0.5 புள்ளிகள் அதிகரித்துள்ளது. ஆசியாவின் முதல் 10 சக்திவாய்ந்த நாடுகளில் அதிக முன்னேற்றம் கண்ட நாடாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது.

பிரதமர் மோடியின் தலைமைத்துவத்துக்கு ஆசிய அளவில் 2வது இடம்!

இந்த தரவரிசையில் இந்தியாவுக்கு மட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடிக்கும் முக்கிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆசிய பிராந்தியத்தின் தலைமைத்துவ மதிப்பீட்டில் பிரதமர் மோடி 5-வது இடத்திலிருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அடுத்தபடியாக ஆசியாவின் இரண்டாவது சிறந்த பிராந்தியத் தலைவராக பிரதமர் மோடி மதிப்பிடப்பட்டுள்ளார். லோவி நிறுவனத்தின் நிபுணர்கள் மேற்கொண்ட மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த முன்னேற்றம் கிடைத்துள்ளது.

இருப்பினும், சர்வதேச அளவிலான தலைமைத்துவம் மற்றும் மூலோபாய இலக்குகள் தொடர்பான மதிப்பீட்டில் இந்தியாவின் செயல்பாடு சற்று பலவீனமடைந்துள்ளதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, வளைகுடா பிராந்திய மோதலின்போது இந்தியாவின் ராஜதந்திரப் பங்களிப்பு குறைவாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முதலீட்டை ஈர்ப்பதில் சீனாவை முந்திய இந்தியா!

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா சீனாவை முந்தியுள்ளது இந்த அறிக்கையின் மற்றொரு முக்கிய அம்சமாகும். முதலீட்டு ஈர்ப்புத் திறன் (Investment Attractiveness) தரவரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

2016 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்தியா மொத்தம் 581 பில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துள்ளது. இதே காலகட்டத்தில் சீனா 506 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது. இதன் மூலம் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இந்தியா முக்கியமான முதலீட்டுத் தளமாக உருவெடுத்து வருவது தெரியவந்துள்ளது.

ராணுவ வலிமையில் முதலிடம் பிடித்த இந்தியா!

ராணுவப் படைகளின் மதிப்பீட்டிலும் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. லோவி நிறுவனத்தின் ஆயுதப் படைகள் தொடர்பான மதிப்பீட்டில் இந்தியா 100-க்கு 100 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

சீனா 85.3 புள்ளிகளையும், அமெரிக்கா 64.8 புள்ளிகளையும் பெற்றுள்ளன. ராணுவ வீரர்களின் எண்ணிக்கை, தயார் நிலை மற்றும் படைகளின் அமைப்பு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஒட்டுமொத்த ராணுவத் திறன் என்ற பிரிவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்கால மனிதவளத்திலும் இந்தியாவுக்கு முதலிடம்!

2050-ம் ஆண்டு வரையிலான எதிர்கால மக்கள் தொகை மற்றும் மனிதவள ஆற்றல் தொடர்பான மதிப்பீட்டிலும் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பிரிவில் இந்தியா 100 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் உள்ள இளம் மற்றும் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி என்ன சொல்கிறது?

கடந்த 2024-ம் ஆண்டில் ஜப்பானை முந்தி ஆசியாவின் மூன்றாவது சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்தது. தற்போது தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அதே இடத்தைத் தக்கவைத்துள்ளது.

2026-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரத் திறன் சற்று பலவீனமடைந்திருந்தாலும், ஆசிய பிராந்தியத்தில் அதன் ஒட்டுமொத்த செல்வாக்கு அதிகரித்துள்ளதாக லோவி நிறுவனம் தெரிவித்துள்ளது.அதேநேரத்தில், ஒட்டுமொத்த அதிகார வலிமையில் சீனா இந்தியாவைவிட கணிசமான முன்னிலையில் உள்ளது. சீனாவின் மதிப்பெண் இந்தியாவைவிட சுமார் 80 சதவீதம் அதிகமாக உள்ளது.

இருப்பினும், ராஜதந்திர உறவுகள், ராணுவக் கூட்டாண்மைகள், முதலீட்டு ஈர்ப்புத் திறன் மற்றும் எதிர்கால மனிதவளம் ஆகியவற்றில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம், ஆசியாவின் முக்கிய சக்தியாக இந்தியா வளர்ந்து வருவதை வெளிப்படுத்துகிறது

Follow Us