AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நான் அடுத்தடுத்தப் பாகங்களாக எடுக்க நினைத்த படம் அதுதான் – இயக்குநர் மிஷ்கின் ஓபன் டாக்

Mysskin talks about Thupparivaalan movie sequels | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்து தற்போது நடிகராக ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருபவர் மிஷ்கின். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனது பார்ட் 2 படங்கள் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

நான் அடுத்தடுத்தப் பாகங்களாக எடுக்க நினைத்த படம் அதுதான் – இயக்குநர் மிஷ்கின் ஓபன் டாக்
மிஷ்கின்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Nov 2026 14:12 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவு, எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவு, பாடகராகவும், பாடலாசிரியராகவும் வலம் வருபவர் மிஷ்கின் (Mysskin). இவர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். அதன்படி சித்திரம் பேசுதடி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன மிஷ்கின் அடுத்தடுத்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவளான் மற்றும் சைகோ ஆகியப் படங்களை இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இறுதியாக கடந்த 2020-ம் ஆண்டு சைகோ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் ட்ரெயின். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து உள்ளார். படம் வருகின்ற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் மிஷ்கின் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

நான் அடுத்தடுத்தப் பாகங்களாக எடுக்க நினைத்த படம் அதுதான்:

துப்பறிவாளன் 2, 3, 4 மற்றும் 5-ஆம் பாகங்களுக்கான கதைக் கருக்கள் என்னிடம் உள்ளன. ஆனால், விஷாலுக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டேன். அதை நான் மீண்டும் தொடரப்போவதில்லை. ட்ரெயின் திரைப்படத்தைப் பொறுத்தவரை, அதில் வரும் கதாபாத்திரத்தை வைத்து இரண்டாம் பாகத்தை உருவாக்க வாய்ப்புள்ளது, ஆனால் அதை எப்படி அணுகுவது என்று இன்னும் முடிவெடுக்கவில்லை. அஞ்சாதே திரைப்படம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைச் சேர்ந்தது. அது முற்றிலும் வேறொரு வகை படம். இன்றைய ஜென் சி தலைமுறையினர், அந்தப் படத்தில் காட்டப்பட்ட வாழ்க்கையோடு எந்த அளவுக்குத் தங்களை இணைத்துக்கொள்ள முடியும் அல்லது அதைப் புரிந்துகொள்ள முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை.

Also Read… ஒத்திப்போகும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மைசா படத்தின் ரிலீஸ்… வெளியானது தகவல்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Shruti Haasan: ட்ரெயின் படத்தில் நான் நடித்ததற்கு காரணம் இதுதான் – ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!

Follow Us