என்னைப் போலவே.. தனது மகன்கள் குறித்து தனுஷ் தெரிவித்த விஷயம்!
Dhanushs Emotional Speech: தமிழில் மக்கள் மத்தியில் பெரிய நாயகனாக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் ஓ.எம். சமீபத்தில் விருது விழா ஒன்றில் பேசிய தனுஷ், தனது மகன்கள் குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
சினிமா ரசிகர்கள் மத்தியில் தென்னிந்தியாவில் கலக்கிவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தமிழில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக இவரின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம்தான் ஓ.எம் (O.M Movie). இந்த படமானது 2026 நவம்பர் 20ம் தேதியில் பான் இந்திய மொழிகளில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த படமானது இவருக்கு ஓரளவு நல்லபடியாக விமர்சனங்களையே மக்கள் மத்தியில் கொடுத்துவருகிறது. இதை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Director Rajkumar Periasamy) இயக்கியுள்ள நிலையில், தனுஷ் தனது சொந்த தயாரிப்பின் கீழ் உருவாக்கியுள்ளார். இந்த படமானது திரையரங்குகளில் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், உலகமெங்கும் சுமார் ரூ 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
சமீபத்தில் விருது விழா ஒன்றில் நடிகர் தனுஷ், தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவருடன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் தனது மகன்கள் குறித்து தனுஷ் வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.




இதையும் படிங்க: தனுஷ் 56 படத்தின் படப்பிடிப்பிற்காக மதுரை சென்ற தனுஷ்… வைரலாகும் வீடியோ!
தனது மகன்கள் குறித்து வெளிப்படையாக பேசிய தனுஷ்:
அந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “எனது மகன்கள் என்னை போலவே மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர்கள். நான் இதுவரை செய்த விஷயங்கள், இந்த இரு மகன்களை பெருமைப்படுத்தவே செய்கிறேன். எதிர்காலத்தில், இவர்களும் என்னை பெருமைப்படுத்துவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன். அதனால், இன்றே அவர்களை பெருமைப்படுத்திவிடலாம்.
இதையும் படிங்க: தன்யாவின் இந்தவார கேப்டன்சி.. டிடிஃஎப் வாசனுக்கு ஆதரவா? – கேள்விகளால் அடுக்கிய போட்டியாளர்கள்!
அப்போதுதான் அதை அவர்களிடம் இருந்து நான் கேட்க முடியும். யாத்ரா மற்றும் லிங்கா, நான் உங்களை நேசிக்கிறேன். அவர்கள் என்னை விட 10 மடங்கு பெரியவர்களாகிவிடுவார்கள்” என அதில் நெகிழ்ச்சியாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓ.எம் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்டிருந்த பதிவு:
The numbers are speaking out loud!
#OM gets an IMDB rating of 8.6 🎯
Running successfully in theatres worldwide!
BMS: https://t.co/q6sY4Yylar
District: https://t.co/pPvVf9TveQ
A @Rajkumar_KP Film
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @agscinemas @archanakalpathi @aishkalpathi @PharsFilm @SitharaEnts @WarnerMusicIN #BinuGeorgeAlexander @DreamBig_film_s @jsujithnair @PenMovies #PenMarudhar @ThinkStudiosInd @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
— Wunderbar Films (@wunderbarfilms) November 22, 2026
தனுஷின் ஓ.எம் திரைப்படமானது தற்போது தமிழில் மக்களிடையே சிறப்பான வரவேற்பையே பெற்றுவருகிறது. இந்த படத்தில் அவர் ஹீரோவாக நடிக்க, சாய் பல்லவி, மம்முட்டி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது திரையரங்குகளில் மக்களிடையே பாசிட்டிவ் மற்றும் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது வார இறுதி முடிவில் அதிகமாக வசூல் செய்து சூப்பர் ஹிட் எதிர்பார்க்கப்படுகிறது.