AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“பெண் கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லையா?”.. தவெக அரசு மீது உதயநிதி ஸ்டாலின் காட்டமான விமர்சனம்!!

Udhayanidhi Stalin Slams TN Govt Over Women Safety: பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாகவும், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் இரவில் அனுப்பிய செய்தி விவகாரத்தில் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

“பெண் கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லையா?”.. தவெக அரசு மீது உதயநிதி ஸ்டாலின் காட்டமான விமர்சனம்!!
உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 Nov 2026 07:32 AM IST

சென்னை, நவ.23: பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் குறித்து தவெக அரசு மீது எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தற்போதைய முதலமைச்சர் பெண்களுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன் எனப் பல்வேறு வாக்குறுதிகளைப் பேசியதாகவும், ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்பட்டதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். தற்காலச் சூழலில் பெண்களை ஆளுங்கட்சியினர் மற்றும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க : பயிரை மேய்ந்த வேலி! 6-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தொல்லை.. ஆசிரியர் போக்சோவில் கைது.. ஈரோட்டில் பரபரப்பு!

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. விவகாரமும் முந்தைய மறுப்பும்:

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மாவட்ட ஆட்சியருக்கு இரவு நேரத்தில் செய்தி அனுப்பிய விவகாரம் சாதாரணமானது அல்ல என உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாகத் தொடர்ந்து நாம் கேள்வி எழுப்பியபோது, அத்தகைய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்பது போல் மறுப்பு தெரிவிக்கப்பட்டுப் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரின் கணவரும் ஒரு ஆட்சியராகப் பணியாற்றுபவர் என்றும், அவர் புகார் அளித்த பிறகும் இதுவரை அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை நடவடிக்கை குறித்து நீதிமன்றம் கேள்வி:

பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட போதிலும் காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது குறித்து நீதிமன்றங்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தமது பேச்சுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு வழக்கு பதிவு செய்தாலும் அதை எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நிர்வாக ரீதியான புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது நிர்வாகச் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவது யார்? கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் விஜய் – வெளியான முக்கிய தகவல்

மனு அளிக்கச் சென்றவர் மீதான தாக்குதல் விவகாரம்:

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், தொகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மனு அளிக்கச் சென்றபோது துணை சபாநாயகர் தாக்கிய சம்பவத்தையும் நினைவு கூர்ந்துள்ளார். தீபாவளி நாளில் நடைபெற்ற அந்தத் தாக்குதல் சம்பவத்தை நினைக்கும்போதே தற்போது அச்சமாக இருப்பதாகவும், சட்டமன்றத்திற்கு செல்லும்போது அத்தகைய நிகழ்வுகள் மனதில் நிழலாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us