AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்சார் பிரச்சனையை எதிர்கொள்ளும் மணிகண்டனின் மக்கள் காவலன் படம்? வைரலாகும் தகவல்

Makkal Kaavalan movie faces censor trouble | நடிகர் மணிகண்டன் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் மக்கள் காவலன். இந்தப் படத்தின் சென்சார் சான்றிதழ் பெருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்சார் பிரச்சனையை எதிர்கொள்ளும் மணிகண்டனின் மக்கள் காவலன் படம்? வைரலாகும் தகவல்
மக்கள் காவலன்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Nov 2026 06:40 AM IST

தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசிரியராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளவர் நடிகர் மணிகண்டன் (Actor Manikandan). இவர் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தற்போது நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் மணிகண்டனின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குடும்பஸ்தன். தொடர்ந்து இவர் தேர்வு செய்யும் படங்களின் கதை மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகி வருவது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற காரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் மணிகண்டனின் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் படத்திற்கு தற்போது மக்கள் காவலன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் மணிகண்டன் உடன் இணைந்து நடிகர்கள் திவ்யா ஸ்ரீபாதா, வாகை சந்திரசேகர், ஏ.வெங்கடேஷ், ஆர்.கே.விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சாபுமோன் அப்துசமத், உன்னிமய பிரசாத், ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு உட்பட நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.

சென்சார் பிரச்சனையை எதிர்கொள்ளும் மணிகண்டனின் மக்கள் காவலன் படம்?

இந்த நிலையில் இந்தப் படம் குறித்து சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி, மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள மக்கள் காவலன் திரைப்படம், ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. இப்படம் டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், படக்குழுவினர் தற்போது திரைப்படத்தை தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்காகச் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தணிக்கை சோதனையின் போது, ​​படத்தில் இடம்பெற்றுள்ள சில வசனங்கள் மற்றும் கருத்துகள் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, தணிக்கைக் குழு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, படத்திற்குச் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டு, மறுஆய்வுக் குழுவை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Also Read… Anirudh-Kavya Maran: கமல்ஹாசன் முதல் ரஜினிகாந்த் வரை.. அனிருத் – காவியா மாறனின் திருமண வரவேற்பில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் நா தொலைஞ்சா போதுனு நினைக்கிறது இவங்கதான்… போட்டியாளர்களின் கலகல பேச்சு!

Follow Us