குடும்பஸ்தன் படத்தில் முதலில் அந்த நடிகர்தான் நடிக்க வேண்டியது – நடிகர் மணிகண்டன் ஓபன் டாக்
Actor Manikandan: தனது எதார்த்தமான நடிப்பால் தமிழ் ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களைப் பெற்றுள்ளார் நடிகர் மணிகண்டன். இந்த நிலையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான குடும்பஸ்தன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் என்பது குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தாவாக அறிமுகம் ஆனவர் மணிகண்டன் (Actor Manikandan). பின்பு படங்களில் சின்ன சின்ன வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் பிறகு கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து மக்களுக்கு எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ள கூடிய கதாப்பாத்திரங்களில் நடித்ததன் மூலம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். தனது நடிப்பின் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களை பிடித்த இவர் இறுதியாக நடித்து வெளியான படம் குடும்பஸ்தன். சாதாரண மிடில் கிளாஸ் இளைஞர் எதிர்பாராத நேரத்தில் திருமணம் செய்துகொள்ளும் சூழல் ஏற்படுகின்றது. அதே நேரத்தில் வேலையும் கைவிட்டு போக தனது குடும்பத்தை பார்த்துக்கொள்ள அவர் எவ்வளவு சிரமத்தை சந்திக்கிறார் என்பதே இந்தப் படத்தின் கதை.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகர் மணிகண்டன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் குடும்பஸ்தன் படத்தில் முன்னதாக நடிக்க இருந்தது வேறு ஒரு நடிகர் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.




குடும்பஸ்தன் படத்தில் நடிக்க நடிகர் மணிகண்டன் முதல் தேர்வு இல்லை:
அதன்படி நடிகர் மணிகண்டன் அளித்தப் பேட்டியில் கூறியுள்ளதாவது குடும்பஸ்தன் படத்தின் இயக்குநர் முதலில் அந்தப் படத்தின் கதையை நடிகர் அசோக் செல்வனிடம் தான் கூறியுள்ளார். அந்த கதையை கூறும் நேரத்தில் நடிகர் அசோக் செல்வன் மற்றப் படங்களில் பிசியாக நடித்து வந்துள்ளார். இதனால் தனக்கு கால் சீட் இல்லை என்று தெரிவித்துவிட்டு இந்தப் படத்தின் கதையை கேட்குமாறு என்னிடம் கூறினார்.
அபோது குடும்பஸ்தன் படத்தின் கதையை கேட்டபிறகு இது நாயகன் என்ற ஸ்டீரியோடைப்பை உடைக்கும் விதமாக உள்ளது என்று எனக்கு தோன்றியது. அதன்பிறகு தான் குடும்பஸ்தன் படத்தில் நடித்தேன் என்று நடிகர் மணிகண்டன் அந்தப் பேட்டியில் வெளிப்படையாக பேசி இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!
இணையத்தில் கவனம் பெறும் நடிகர் மணிகண்டனின் பேச்சு:
“#Kudumbasthan script was first came to #AshokSelvan but he didn’t had date. So AshokSelvan asked me to listen the script. When I heard the script, it broke all the stereotypes of a hero🤝”
– #Manikandanpic.twitter.com/9kcVf2ML0d— AmuthaBharathi (@CinemaWithAB) July 22, 2025
Also Read… கருப்பன் வரான் வழி மறிக்காதே… சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் கருப்பு படத்தின் டீசர்!