Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vadivelu : மாரீசன் திரைப்படத்தின் பிரீமியர் ஷோவை பார்த்த வடிவேலு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Maareesan Film Premiere Show : நடிகர் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலுவின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் மாரீசன். மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும், இப்படம் வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் வடிவேலு இப்படத்தின் பிரீமியர் ஷோவை படக்குழுவுடன் இணைந்து பார்த்துள்ளார்.

Vadivelu : மாரீசன் திரைப்படத்தின் பிரீமியர் ஷோவை பார்த்த வடிவேலு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வடிவேலு மற்றும் மாரீசன் படக்குழு Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 21 Jul 2025 16:28 PM

பிரபல மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கரின் (Sudheesh Sankar) இயக்கத்தில், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகியுள்ள படம் மாரீசன் (Maareesan). இந்த படத்தில் நடிகர் ஃபகத் பாசில்  (Fahadh Faasil) மற்றும் வடிவேலு (Vadivelu) இணைந்து நடித்துள்ளனர். இதற்கு முன் இந்த கூட்டணி, இயக்குநர் மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த படத்தை அடுத்ததாக இரண்டாவது முறையாக இந்த மாரீசன் படத்தில் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த படமானது முற்றிலும் வித்தியாசமான, எமோஷனல் மற்றும் நகைச்சுவை நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ளதாம். இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் ஏ.பி. இன்டர்நெஷனல் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடிகர் வடிவேலு, படக்குழுவுடன் இணைந்து மாரீசன் திரைப்படத்தின் பிரீமியர் காட்சியைப் (premiere show) பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : தனுஷூடன் இணையும் படம்.. அப்டேட் கொடுத்த மாரி செல்வராஜ்!

நடிகர் வடிவேலு பிரீமியர் ஷோவை பார்த்த வீடியோ :

மாரீசன் திரைப்படத்தின் கதைக்களம் :

இந்த மாரீசன் திரைப்படத்தின் கதைக்களமானது, முற்றிலும் மாறுபட்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் வடிவேலு  மறதி நோயினால் அவதிப்படுபவராக நடித்துள்ளார். அவர் நல்ல  பணக்காரன். ஆனால் நடிகர் ஃபகத் பாசில் பணம் இல்லாமல், திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நடிகராக நடித்திருக்கிறார். வடிவேலு மறதியினால் அவதிப்படும் நிலையில், அவரிடம் ஃபகத் பாசில் பணத்தைத் திருடுகிறாரா அல்லது இல்லையா என்பதுதான் இப்படத்தை மைய  கதையாகும். இந்த படமானது சுமார் ரூ 80 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

மாரீசன் படத்தின் தமிழ் தியேட்டர் ரிலீஸ் உரிமை :

நடிகர்கள் வடிவேலு மற்றும் ஃபகத் பாசிலின் மாரீசன் படம் வரும் 2025 ஜூலை 25ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை திவ்யா மூவிஸ் நிறுவனமானது வாங்கியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் உரிமையைப் பெறுவதற்கு, இந்த நிறுவனம் சுமார் ரூ 7 கோடியைக் கொடுக்கவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகிவருகிறது.