Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Fahadh Faasil : ஃபகத் பாசில் வைத்திருக்கும் 17 வருட பழைய போன்.. அதன் விலை இத்தனை லட்சமா?

Fahadh Faasils Viral Phone : மலையாள சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராகத் தந்து வாழ்க்கையை நடத்திவருபவர் நடிகர் ஃபகத் பாசில் . இவர் சமீபத்தில் , இளம் நடிகர் நஸ்லென் புதிய படத்தின் பூஜையில் கலந்துகொண்டார். அதில் அவர் பயன்படுத்திய பழமையான போன் அனைவரையும் கவர்ந்திருந்தது. அதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

Fahadh Faasil : ஃபகத் பாசில் வைத்திருக்கும் 17 வருட பழைய போன்.. அதன் விலை இத்தனை லட்சமா?
ஃபஹத் ஃபாசில் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 17 Jul 2025 16:00 PM

நடிகர் ஃபகத் பாசில் (Fahadh Fasil) தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழி படங்களில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இவரின் தயாரிப்பில் திரைப்படங்கள் பல உருவாகிவரும் நிலையில், திரைப்படங்களில் நடிப்பதை அடுத்தாக, இதையும் மிகப் பிரம்மாண்டமாக வளர்த்து வருகிறார். இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் ரிலீசிற்கு கடத்திருக்கும் திரைப்படம் மாரீசன் (Maareesan). இயக்குநர் சுதீஷ் சங்கர் (Sudheesh Shankar) இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலுவும் (Vadivelu) மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், மேலும் பல மலையாள படங்களிலும் நடிகர் ஃபகத் பாசில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் நடிகர் நஸ்லென் (Naslen) நடிப்பிலும், இயக்குநர் அபினவ் சுந்தர் இயக்கத்திலும் உருவாகிவரும் புதிய ஷூட்டிங் பூஜையில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது நடிகர் ஃபகத் பாசில் வைத்திருந்த போன் (Phone) தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவந்தது.

இதையும் படிங்க : ரஜினிகாந்த்தின் கூலி – மோனிகா பாடலின் மேக்கிங் வீடியோ !

அந்த போன் சுமார் 17 வருடப் பழமையான போன் என கூறப்படும் நிலையில், அதன் விலையும் அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. அது ஸ்மார்ட் போன் அல்லாத, சாதாரண போன் மாதிரி இருந்தாலும், அந்த தொலைபேசியின் விலை மட்டுமே சுமார் ரூ. 5 லட்சம்  இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பார்க்கலாம்.

நடிகர் ஃபகத் பாசில் பயன்படுத்திய விலையுயர்ந்த தொலைப்பேசி :

பொதுவாகப் பிரபலங்கள் பலவிதமான புதுரக. தொலைப்பேசிகள், கேட்ஜெட்டுகள் எனப் பல வித்தியாசமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்களின் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் நடிகர் ஃபகத் பாசில் பயன்படுத்திய போன் தொடர்பான தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : ரிலீசுக்கு தயாரான ‘மாரீசன்’.. வெளியான சென்சார் சான்றிதழ்!

நடிகர் ஃபகத் பாசில் வைத்திருக்கும் தொலைபேசி “வெர்டு அசென்ட் டி.ஐ”  (vertu ascent ti ferrari limited edition 2009) என கூறப்படுகிறது. இந்த தொலைபேசியானது கடந்த 2007ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பின் ,2009ம் ஆண்டு விற்பனைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மாடல் தொலைபேசி தற்போது உற்பத்தியில் இல்லை. ஆனால் இந்த தொலைபேசிக்கு பல்வேறு விதமான தனித்துவங்களை இருக்கிறது.

இணையத்தில் வைரலாகும் ஃபகத் பாசில் வீடியோ :

 

View this post on Instagram

 

A post shared by Effin M (@chronograph_2022)

ஃபகத் பாசிலின் வெர்டு அசென்ட் டி.ஐ போனின் தனித்துவம் :

அவர் வைத்திருக்கும் அந்த தொலைபேசியானது, பிரீமியம் டைட்டானியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சபையர் படிகம் மற்றும் கையினால் தைக்கப்பட்ட தோல் போன்ற பல்வேறு விஷயங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொலைப்பேசியானது அறிமுகப்படுத்தப்பட்டபோது சுமார் ரூ. 5.54 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தொலைப்பேசியானது தற்போது தயாரிப்பில் இல்லை. ஆனால் சில இணையத்தளங்களில் இந்த தொலைப்பேசி சுமார் ரூ. 1ல் இருந்து ரூ 1.5 லட்சங்கள் வரை விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.