AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

யூத் முதல் ஆடு 3 வரை… தென்னிந்திய சினிமாவில் நாளை திரையரங்குகளில் வரிசைக்கட்டும் படங்கள் – லிஸ்ட் இதோ

Theatre Release Movies List This Week List Here: தென்னிந்திய சினிமாவில் வாரம் வாரம் தொடர்ந்து பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்களின் தொகுப்பை தற்போது இந்த செய்தியில் பார்க்கலாம்.

யூத் முதல் ஆடு 3 வரை… தென்னிந்திய சினிமாவில் நாளை திரையரங்குகளில் வரிசைக்கட்டும் படங்கள் – லிஸ்ட் இதோ
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Mar 2026 18:34 PM IST

யூத் படம்: தமிழ் சினிமாவில் நடிகர் கருணாஸின் மகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் கென் கருணார். ஆரம்ப கலக்கட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து வந்த கென் பிறகு நாயகன்களின் மகனாகவும் கதைக்கு தேவையான முக்கிய வேடங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் சினிமாவில் பல புது அவதாரங்களை எடுத்துள்ளார். அதன்படி கென் கருணாஸ் தமிழ் சினிமாவில் தற்போது இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் யூத். இந்தப் படத்தினை எழுதி இயக்கியது மட்டும் இன்றி பாடலை எழுதி அதனைப் பாடவும் செய்துள்ளார். இந்த யூத் படத்தின் கென் கருணாஸ் உடன் இணைந்து பல புதுமுகங்களும் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்கள் முன்னதாக வெளியாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு யூத் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது படம் நாளை 19-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

உஸ்தாத் பகத் சிங்: தெலுங்கு திரையுலகில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் பவன் கல்யாண். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் உஸ்தாத் பகத் சிங். இந்தப் படத்தை இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் பவன் கல்யாண் உடன் இணைந்து நடிகைகள் ஸ்ரீலீலா மற்றும் ராஷி கண்ணா இருவரும் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் படம் நாளை 19-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read… எனக்கு எல்லா இயக்குநர்களும் நோ சொல்றது அதுக்காகதான் – சிங்கம்புலி ஓபன் டாக்

ஆடு 3: மலையாள சினிமாவில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ஆடு படம் அடுத்தடுத்து இரண்டு பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஃபேண்டசி காமெடி பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெயசூர்யா,சைஜு குருப், விநாயகன், சன்னி வெய்ன், தர்மஜன் போல்காட்டி, விஜய் பாபு, பகத் மானுவல், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் படம் நாளை 19-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read… ஒரு வழியா… ஜன நாயகன் படத்தை பார்த்து முடித்தது ரிவைசிங் கமிட்டி- விரைவில் வெளியாகும் சென்சார் அப்டேட்

Follow Us