AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Aadhirai Soundarajan: பைக் ரேஸில் இறங்கிய பிக் பாஸ் புகழ் ஆதிரை சௌந்தரராஜன் – வைரலாகும் பதிவு!

Aadhirai Soundarajans New Chapter: தமிழில் சமீபத்தில் வெளியான பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆதிரை சௌந்தரராஜன். இவர் சீரியலில் கதாநாயகியாக நடித்துவந்த நிலையில், தற்போது பைக் ரேஸில் களமிறங்கியுள்ளார். இது குறித்த பதிவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Aadhirai Soundarajan: பைக் ரேஸில் இறங்கிய பிக் பாஸ் புகழ் ஆதிரை சௌந்தரராஜன் – வைரலாகும் பதிவு!
ஆதிரை சௌந்தரராஜன்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 17 Mar 2026 20:26 PM IST

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் (Bigg Boss) மூலமாக உச்சத்தை அடைந்தவர்களும் இருகிறார்கள், காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த 2025 – 2026ம் ஆரம்பம் முதல் வெளியாகிவந்த நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil). இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வழங்கியிருந்தார். இந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியானது இதுவரை வெளியான சீசன்களிலே அதிக வன்முறை மற்றும் சண்டைகளை சந்தித்த சீசன் என்றே கூறலாம். அந்த வகையில் 3வது வாரத்திலே மக்களால் வெளியேற்றப்பட்டவர்தான் ஆதிரை சௌந்தரராஜன் (Aadhirai Soundarajan). இவர் கடந்த பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பூர்ணிமா ரவியின் நெருங்கிய நண்பராம். இவர் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டிருந்தார். மேலும் ஆதிரை நுழைந்த சில நாட்களிலே இவரின் நடத்தைகள் சரியில்லை என பலமுறை பிக் பாஸால் கண்டிக்கப்பட்டார்.

பின் மீண்டும் வைல்ட்கார்ட் எண்டரியாக ரீ-எண்டரி கொடுத்தார். அப்படி இருந்தும் இறுதி வாரத்தில் வெளியேற்றப்பட்டிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் சீரியலில் நடித்துவந்த நிலையில், தற்போது பைக் ரேஸில் கலந்துகொள்கிறாராம். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: எனக்கு அந்த நடிகருடன் இணைந்து நடிக்கணும்-னு ஆசை.. ஆனால் – கயாடு லோஹர் சொன்ன விஷயம்!

பைக் ரேஸ் குறித்து நடிகை ஆதிரை சௌந்தரராஜன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

அந்த பதிவில் ஆதிரை, “ரெடி டு ரேஸ்” என்று பைக் ரேஸில் களமிறங்குவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் அதிரைக்கு பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிரை சௌந்தரராஜன் நடித்துவரும் சீரியல் :

ஆதிரை சௌந்தரராஜன் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகிய மகாநதி சீரியலில் இவர் முக்கிய வேடத்தில் நடித்துவந்தார். இந்த சீரியலில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்றே கூறலாம். இந்த சீரியலை தொடர்ந்து இவர் சில படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தில் கால்பந்து விளையாடும் பெண்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: யூத் பட ட்ரெய்லரை பார்த்துட்டு தனுஷ் சார் சொன்னது இதுதான் – கென் கருணாஸ்!

பின் நடிகர் ஜீவாவின் நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 9 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில், புது படங்களில் இவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது பைக் ரேஸில் இவர் கலந்துகொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us