AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kayadu Lohar: எனக்கு அந்த நடிகருடன் இணைந்து நடிக்கணும்-னு ஆசை.. ஆனால் – கயாடு லோஹர் சொன்ன விஷயம்!

Kayadu Lohar Desire To Act: தென்னிந்திய மக்கள் மத்தியில் இளம் நடிகையாக கவர்ந்துவருபவர் கயாடு லோஹர். இவர் சமீபத்தில் வெளியான பவழ மல்லி என்ற பாடலுக்கு நடமாடி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்திருந்தார். அந்த வகையில் நேர்காணல் ஒன்றில், பிரபல நடிகர் ஒருவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 17 Mar 2026 19:26 PM IST
நடிகை கயாடு லோஹர் தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக இருந்துவருகிறார். கன்னடம் சினிமாவின் மூலம் இவர் கதாநாயகியாக நுழைந்த நிலையில், தற்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரபலமான ஒருவராக இருந்துவருகிறார்.

1 / 5
இவர் தனது 2வது படத்திலே பெண் லீட் கதாநாயகியாக மலையாளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு என்ற படத்தில் நடித்திருந்தார். இது அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. இதையடுத்து இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியிருந்தது.

2 / 5
அந்த வகையில் இவருக்கு தமிழில் மிக பிரம்மாண்ட பிரபலத்தை கொடுத்த படம் டிராகன். இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில், இப்படத்தில் இவரின் நடனம் பிரபலமாகியிருந்தது. இந்த படம் இவருக்கு சிறப்பான வெற்றியை கொடுக்க, அடுத்தடுத்த தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாக தொடங்கியிருந்தார்.

3 / 5
நடிகை கயாடு லோஹர் தற்போது தமிழில் இதயம் முரளி, இம்மார்ட்டல் போன்ற படங்களில் நடித்துவருகிறார். மேலும் இவர் சமீபத்தில் சாய் அப்யங்கர் இசையமைப்பில் வெளியான பவழ மல்லி என்ற பாடலுக்கு சிறப்பு நடனமாடியிருந்தார். இதில் இவரின் நடனமானது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தமிழ் உச்ச நடிகர் ஒருவருடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

4 / 5
அந்த நேர்காணலில் கயாடு லோஹர் பேசுகையில், எனக்கு தளபதி விஜய் சாருடன் படத்தில் இணைந்து நடிப்பதற்கு மிகவும் ஆசை. ஆனால் அவர் ஜன நாயகன் படம்தான் தனது கடைசி திரைப்படம் என கூறிவிட்டார். அதனால் எனக்கு கொஞ்சம் வருத்தம் என அதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விஷயம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது.

5 / 5
Follow Us