ஓடிடியில் வெளியாகி உள்ள துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
I Am Game Movie OTT Review Here | நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான படம் ஐ அம் கேம். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் கடந்த 3-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு மலையாள சினிமாவில் உருவாகி திரையரங்குகளில் வெளியான படம் ஐ அம் கேம் (I Am Game). இந்தப் படத்தை மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் எழுதி இயக்கி உள்ளார். ஃபேண்டசி ட்ராமா பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபரர் ஃபிலிம்ஸ் தயாரித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஆண்டனி வர்கீஸ், மிஸ்கின், சம்யுக்தா விஸ்வநாத், கதிர், வினய் ஃபோர்ட், ஜெயசுதா, ஷ்யாமபிரசாத், அஷ்வின் மேத்யூ, பிரபாகர், பார்த் திவாரி, ஹர்ஷத், வருண் பாண்டே, எல்தோ மேத்யூ, மிதுன் வேணுகோபால், வீணை கலாதரன், நீரஜா ராஜேந்திரன் மற்றும் பிலாஸ் சந்திரஹாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஐ அம் கேம் படத்தின் கதை என்ன?
இந்த ஐ அம் கேம் படத்தில் பார்ன் வித் கோல்ட் ஸ்பூன் என்று சொல்வார்கள் அல்லவா அந்த கதாப்பாத்திரம் தான் துல்கர் சல்மான். சிறு வயதிலிருந்தே அதிகப்படியாக பணத்தை செலவு செய்வது கூடாத சகவாசத்தால் பணத்தை பெட்டிங்கில் வைத்து தோற்பது என எந்த பொருப்பும் இல்லாத நபராக வாழ்ந்து வருகிறார் துல்கர் சல்மான். இவர் இப்படி சுற்றித்திரியும் போது ஏற்படும் பகை ஒன்றின் காரணமாக விபத்து ஏற்பட்டு தனது கையை இழக்கிறார்.




அவருக்கு ட்ரான்ஸ்ப்ளாண்ட் செய்து வேறு ஒரு நபரின் கை வைக்கப்படுகின்றது. அந்த கை வைக்கப்பட்ட பிறகு துல்கரின் வாழ்க்கையில் என்ன எல்லாம் நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்து ரசிகர்கள் தொடர்ந்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… ரத்தமும் இல்ல சத்தமும் இல்ல.. இந்த வாரம் போட்டியாளர்களை வெளுத்துவாங்க காத்திருக்கும் விஜய் சேதுபதி!