Dulquer Salmaan: நீ செய்.. நீயே கண்டுபிடி… தந்தை மம்முட்டி சொன்ன அட்வைஸ் குறித்து பேசிய துல்கர் சல்மான்!
Dulquer Salmaan Reveals Mammoottys Unique Advice: மலையாளம் சினிமாவின் மூலம் நாயகனாக நுழைந்து, தற்போது தென்னிந்திய மொழிகளிலும் ஹீரோவாக நடித்துவருபவர் துல்கர் சல்மான். இவரின் நடிப்பில், 2026ம் ஆண்டு செப்டம்பரில் ஐஆம் கேம் படமானது வெளியாகிறது. இப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துல்கர் சல்மான், தந்தை மம்முட்டி சொன்ன அட்வைஸ் பற்றி பகிர்ந்துள்ளார்.
மலையாளம் சினிமாவில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின், துல்கர் சல்மான் (Dulquer Salmaan) நேரடியாக நடித்திருக்கும் திரைப்படம்தான் ஐஆம் கேம் (I’m Game). இதை ஆர்டிஎக்ஸ் (RDX) பட இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidhayath) இயக்கியுள்ளார். இவர் மற்றும் துல்கர் சல்மானின் கூட்டணியில் இப்படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. இதில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் கதிர், மிஷ்கின், சம்யுக்தா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதியில் காத்திருக்கிறது. அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது.
அந்த விழாவின்போது, ரசிகர் ஒருவர் துல்கரிடம், உங்கள் தந்தை மம்முட்டி (Mammooty) உங்களுக்கு கொடுத்த அட்வைஸ் என்ன என கேட்டிருந்தார். அப்போது அதற்கு துல்கரும் சிறப்பான விளக்கத்தை கொடுத்தார்.
இதையும் படிங்க: ஹன்சிகா எப்போவுமே அப்படித்தான் – ரவி மோகன் சொன்ன நகைச்சுவை சம்பவம்!
தந்தை மம்முட்டி தனக்கு கொடுத்த அட்வைஸ் குறித்து பேசிய துல்கர் சல்மான்:
அந்த மேடையில் பேசிய மம்முட்டி,”என் தந்தை என் வாழ்க்கையில் அதிகம் தலையிடாததால், நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட மகன் என்று நினைக்கிறேன். அவர், “நீ செய், நீயே கண்டுபிடி, நீ தோற்பாய், நீ வெல்வாய், எல்லாம் நீயாகத்தான் இருக்க வேண்டும்” என்று சொல்வார். எந்த ஒரு விஷயத்திற்கும் நான் ஒரு துணையாக இருக்கிறேன், சர்க்கஸில் நீ கீழே விழுந்தால் பாதுகாப்பு வலை இருப்பது போல, நான் உனக்கு ஒரு பாதுகாப்பு வலை.
இதையும் படிங்க: இது புதுசா இருக்கே… ஐ அம் கேம் படத்திற்கு புரமோஷ்னல் பாடலை வெளியிட்ட படக்குழு
அவர்தான் என் பாதுகாப்பு வலை, ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று அவர் எனக்குச் சொல்வதில்லை. அவர், “நீயே கண்டுபிடி, நீ கற்றுக்கொள், நீ தவறுகள் செய்” என்று சொல்வார். எனவே, அதுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் என்று நினைக்கிறேன் என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
ஐஆம் கேம் படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் வெளியிட எக்ஸ் பதிவு:
The stakes have never been higher. “HIGH STAKES”—the official promotional song from I’M GAME—is out now! 🃏🔥https://t.co/mZ0gAnzdNI@dulQuer @NAHASKh1 @BrodhaV @jakes_bejoy @VarghesePepe @am_kathir @iamSandy_Off @DirectorMysskin @11Lohar @samyukthavv @anbariv @ImGameMovie… pic.twitter.com/wpggGLbsLs
— Dulquer Salmaan (@dulQuer) August 31, 2026
இந்த ஐஆம் கேம் படமானது கேம்ப்ளிங் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பேண்டஸி, ஆக்ஷன் மற்றும் காதல் போன்ற கதைங்கலத்தையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதியில் இப்படம் வெளியாகும் நிலையில், நிச்சயம் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



