துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் பாடல்களை வெளியிட்டது படக்குழு
I am Game Movie Audio Jukebox | துல்கர் சல்மான் நடிப்பில் மலையாள சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஐ அம் கேம். இந்தப் படத்தின் ஆடியோ ஜூக் பாக்ஸை படக்குழு தற்போது வெளியிட்டு உள்ளது வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் திரையரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் மலையாள சினிமாவில் தற்போது உருவாகி உள்ள படம் ஐ அம் கேம். இந்தப் படம் கடந்த வாரமே ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இருந்தாலும் வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாத காரணத்தால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி தற்போது ஐ அம் கேம் படம் வருகின்ற 03-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தை இயக்குநர் நகாஷ் ஹிதாயத் எழுதி இயக்கி உள்ளார். மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குநராக உள்ள இவர் முன்னதாக ஆர்டிஎக்ஸ் என்ற படத்தை எழுதி இயக்கி இருந்தார் அந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். அதன்படி நடிகர்கள் கயாடு லோஹர், மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் கோட்டை, கதிர் ஆகியோர் நடித்து உள்ளனர்.




ஐ அம் கேம் படத்தின் பாடல்களை வெளியிட்டது படக்குழு:
இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ஆடியோ ஜூக் பாக்ஸை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த பாடல்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… பிரித்விராஜ் சுகுமாரின் டாய்ரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
ஐ அம் கேம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
🎬 #ImGame Movie Audio Jukebox — Out Now! 🎶
Malayalam – https://t.co/XR3GXzdlwK
Tamil – https://t.co/dzF0GH5tZ0
Telugu – https://t.co/uV8odn0Z59
Hindi – https://t.co/WnQNbqObZc
Kannada – https://t.co/6YsRdahWkT
— Jakes Bejoy (@jakes_bejoy) August 30, 2026
Also Read… Nani: அனிருத் ஒரு தனித்துவமானவர்.. பாராட்டி பேசிய நடிகர் நானி!