ஹாய் முதல் ஒன்ஸ் மோர் வரை… கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் பட்டியல் இதோ
This week theatre release for Kollywood cinema | கோலிவுட் சினிமாவில் இந்த வாரம் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் இல்லாமல் இரண்டாம் கட்ட நாயகன்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அந்தப் படங்களின் பட்டியளை தற்போது இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஹாய் படம்: தமிழ் சினிமாவில் நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் ஹாய். இந்தப் படத்தை இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதி இயக்கி உள்ளார். பாடலாசிரியராக பலப் படங்களில் முன்னணி நடிகர்களுக்கு பாடல்களை எழுதிய இவர் தற்போது இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தை ரௌடி பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்து உள்ளனர். இந்த படத்தின் பணிகள் முன்னதாகவே முடிவடைந்த நிலையில் கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்த ஹாய் படம் நாளை 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமரம் படம்: தமிழ் சினிமாவில் இயக்குநர் திருவருள் கிருஷ்ணன் எழுதி இயக்கி உள்ள படம் அமரம் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகர்கள் தேஜஸ் ராஜன் (ராஜன் தேஜஸ்வி), ஐரா அகர்வால், சாய் தீனா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். லவ் மற்றும் மற்றும் சர்வைவல் ஆக்ஷன் டிராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படம் நாளை 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




ஒன்ஸ் மோர் படம்: நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் இரண்டாவதாக வெளியாகும் படம் ஹாய். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடித்து உள்ளார். இவர்களின் கூட்டணியில் உருவாகி உள்ள இந்த ஒன்ஸ் மோர் படம் கடந்த ஆண்டே திரையரங்குகளில் வெளியாக வேண்டியது. ஆனால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு தற்போது இறுதியாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் நாளை 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஐ அம் கேம் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் இணைந்தது எப்படி? இயக்குநர் ஓபன் டாக்