AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தனது அடுத்தடுத்தப் படங்கள் குறித்து அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த் – வைரலாகும் வ்

Rajinikanth talks about upcoming movies | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் அவர் சமீபத்தில் அளித்தப் பேட்டியில் தனது படங்கள் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தனது அடுத்தடுத்தப் படங்கள் குறித்து அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த் – வைரலாகும் வ்
ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Aug 2026 16:52 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து 50 ஆண்டுகளாக ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் மொழியில் நடிகர் ரஜினிகாந்த் அதிக அளவில் படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் பெரிதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்தின் படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் ஜப்பான் மற்றும் சைனா போன்ற நாடுகளில் இருந்து ரசிகர்கள் படம் பார்வதற்காகவே தமிழ் நாட்டிற்கு வருகை தருவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

அதன்படி அவரது நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது தர்மன் படத்திற்காக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கமல் ஹசன் உடன் இணைந்து நடிக்க உள்ள படத்தின் பணிகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது அடுத்தடுத்தப் படங்கள் குறித்து அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்:

இந்த நிலையில் ஹைதராபாத்தில் தர்மன் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய போது செய்தியாளர்களிடைம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 பணிகள் நிறைவடைந்துவிட்டன. தர்மன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தை கமல் சார் தயாரிக்கிறார். மேலும், கமல் சாரும் நானும் இணைந்து நடிக்கும் ஒரு படத்தையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கிறது என்று அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அரசன் படம் இந்த ஆண்டு ரிலீஸாகாதா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக் பாஸ் 10 தமிழில் இணையும் விஜய் டிவி சீரியல் நடிகர்கள்.. யார் யார் தெரியுமா?

Follow Us