அரசன் படம் இந்த ஆண்டு ரிலீஸாகாதா? வைரலாகும் தகவல்
Arasan movie release update viral on social media | தமிழ் சினிமாவில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அரசன். இந்தப் படத்தின் வெளியீட்டு குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தை இயக்குநர் வெற்றி மாறன் எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் 2026-ம் ஆண்டு பூஜையுடன் தொடங்கியது. வி கிரியேஷன் சார்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். வட சென்னை பகுதியை மையமாக வைத்து 80-களில் நடைபெறும் கதையாக இந்தப் படத்தின் கதை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படத்தின் கதை எப்படி இருக்கும் என்பது தொடர்பான தகவல்கள் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வட சென்னை படத்தின் கதாப்பாத்திரங்கள் அதே வேடத்தில் நடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் வெளியீடு தொடர்பான தகவல்களும் சினிமா வட்டாரங்களில் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.




அரசன் படம் இந்த ஆண்டு ரிலீஸாகாதா?
முன்னதாக நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி உள்ள இந்த அரசன் படம் இந்த 2026-ம் ஆண்டே திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியான தகவலின்படி, வடிமாறன் வழக்கம்போல இப்படத்தை மெருகேற்றி, வட சென்னை திரைப்பட வரிசைக்குச் சாத்தியமான மிகச்சிறந்த வடிவத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், இப்படம் பெரும்பாலும் 2027-ஆம் ஆண்டு கோடைக்காலத்தில்தான் வெளியாகக்கூடும். சிலம்பரசனின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றாக இது அமையவுள்ளது.
Also Read… மயில் வீரா.. கார்த்தியின் சர்தார் 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Arasan 👑 BUZZ — The movie may now mostly release only in Summer 2027, as #Vetrimaaran, as usual, is refining the project and making sure he’s shooting the BEST version possible for the #VadaChennai franchise. This is going to be one of the most lifetime important project of… pic.twitter.com/EPPdoX9Y1e
— Movies Singapore (@MoviesSingapore) August 24, 2026
Also Read… ரதிமா ஏ ரதிமா.. சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸின் ரதிமா இண்டீ பாடல் வெளியீடு!