AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மயில் வீரா.. கார்த்தியின் சர்தார் 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Sardar 2 First Single: மக்கள் மத்தியில் பிரபலமான நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் கார்த்தி. இவரின் நடிப்பில் உருவாகியுள்ள பாகம் 2 படம்தான் சர்தார் 2. இப்படம் இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் உருவாகியுள்ள நிலையில், மயில் வீர என்ற முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மயில் வீரா.. கார்த்தியின் சர்தார் 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சர்தார் 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 Aug 2026 21:03 PM IST

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர்தான் கார்த்தி (Karthi). இவர் சினிமாவின் ஆரம்பத்தில் இயக்குநர் மணிரத்தினத்தின் (Mani Rathinam) உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார். இதையடுத்து சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக நடிகராக நடிக்க தொடங்கியிருந்தார். இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 26-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. அதில் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் வா வாத்தியார் (Vaa vaathiyaar). இயக்குநர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த வரிசையில் 2026ம் ஆண்டில் 2வது வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் சர்தார் 2 (Sardar 2).

இதை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் (PS Mithran) இயக்க, பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளது.மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ள நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: இரும்புத்திரை படத்தின் கதையை அர்ஜுன் சார் கேட்கவே மறுத்துவிட்டார் – பி.எஸ்.மித்திரன்

சர்தார் 2 படத்தின் முதல் பாடல் ரிலீஸ் எப்போது:

சாம் சி எஸ் இசையில் சர்தார் 2 படமானது பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் பாடலாக “மயில் வீரா” என்ற பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலானது 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: துருவ் விக்ரமின் குரலில்.. நயன்தாரா – கவினின் ஹாய் திரைப்படத்திலிருந்து குடிகார நெஞ்சு பாடல் வெளியீடு!

சர்தார் 2 படத்தின் மயிலில் வீரா பாடலின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சர்தார் 2 படத்தில் கார்த்தி தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜீஷா விஜயன் மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த படமானது 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், இதையடுத்து தற்போது முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் சென்சார் அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us