AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரசிகர்கள் கேட்டா அரசியலுக்கு வருவீங்களா? ரவிமோகன் சொன்ன விசயம்

Ravi Mohan Interview | ரவி மோகன் தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெறும் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் ரவி மோகன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.

ரசிகர்கள் கேட்டா அரசியலுக்கு வருவீங்களா? ரவிமோகன் சொன்ன விசயம்
ரவி மோகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Aug 2026 12:40 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி தற்போது படங்களை தயாரிப்பது மட்டும் இன்றி படங்களை இயக்குவதும் செய்து வருகிறார் ரவி மோகன். அதன்படி நடிகர் ரவி மோகன் நடிப்பில் படங்கள் வரிசையாக வெளியாக காத்திருக்கிறது என்றால் மற்றொரு பக்கம் அவரது இயக்கத்தில் மற்றும் அவரது தயாரிப்பில் வெளியாகும் படங்களும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் பிசியான நபராக வலம் வருகிறார் ரவி மோகன்.

இந்த நிலையில் இந்த ஆண்டில் அடுத்தடுத்தடுத்து ரவி மோகன் நடிப்பில் படங்கள் வெளியாக காத்திருக்கும் நிலையில் புதுப் புதுப் படங்களில் கமிட்டாகி நடிப்பதிலும் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் ரவி மோகன். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரவி மோகன் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரசிகர்கள் கேட்டா அரசியலுக்கு வருவீங்களா?

அதன்படி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் ரவி மோகன் பேசியபோது செய்தியாளர் ஒரு கேள்வியை எழுப்பினார். அந்த கேள்வியில் உங்கள் ரசிகர்கள் கேட்டாள் அரசியலுக்கு வருவீர்களா என்று ரவி மோகனிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த ரவி மோகன், இது ஒரு அரசியல் சார்ந்த கேள்வி. அரசியலில் ஈடுபடாமலோ அல்லது அரசியலுக்கு வராமலோ கூட நம்மால் நல்ல காரியங்களைச் செய்ய முடியும். ஆர்வமுள்ளவர்கள் இதில் களமிறங்குகிறார்கள். எனக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டால், அரசியலில் நுழைவது ஒன்றும் தவறான விஷயமல்ல. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஐ அம் கேம் படத்தின் புது போஸ்டரை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் பதிவு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கார் ரேஸில் விபத்து… நடிகர் அஜித் குமாருக்கு என்ன ஆச்சு? வைரலாகும் வீடியோ

Follow Us