AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

 ஐ அம் கேம் படத்தின் புது போஸ்டரை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் பதிவு!

I Am Game Movie New Poster | நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ஐ அம் கேம். இந்தப் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 ஐ அம் கேம் படத்தின் புது போஸ்டரை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் பதிவு!
 ஐ அம் கேம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Aug 2026 13:15 PM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் எந்தப் படம் வெளியாகிறதோ அது நிச்சயமாக நல்லா இருக்கும் என்று ரசிகர்கள் நம்பி திரையரங்கிற்கு செல்லும் அளவிற்கு அவரது கதை தேர்வு சிறப்பாக இருக்கிறது. அதே போல நடிகர் துல்கர் சல்மான் நடிக்காமல் வேண்டாம் என்று சொல்லும் படம் பார்க்க வேண்டாம் என்று ரசிகர்கள் நினைக்கும் அளவிற்கு அந்தப் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது.

இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஐ அம் கேம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முன்னதாகவே முடிவடைந்த நிலையில் படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026 வெளியாவதாக இருந்தது. இந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் முடிவடைய தாமதம் ஆன காரணத்தால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

 ஐ அம் கேம் படத்தின் புது போஸ்டரை வெளியிட்ட படக்குழு:

இந்தப் படத்தின் வெளியீட்டை தற்போது படக்குழு செப்டம்பர் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற 03-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் முன்னதாக ஐ அம் கேம் படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் தற்போது படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது…. தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நயன்தாராவின் அந்த படத்தின் டிக்கெட்டை அடிச்சி புடிச்சி வாங்கி பார்த்தேன் – கவின் ஓபன் டாக்!

Follow Us