AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

செப்டம்பருக்கு தள்ளிப்போன துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் ரிலீஸ்… சோகத்தில் ரசிகர்கள்

I’m Game has been postponed to September month 2026 | நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ஐ அம் கேம். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பருக்கு தள்ளிப்போன துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் ரிலீஸ்… சோகத்தில் ரசிகர்கள்
ஐ அம் கேம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Aug 2026 12:52 PM IST

பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் எந்த மொழியில் படம் வெளியானாலும் அந்தப் படங்கள் பான் இந்திய மொழிகளில் உள்ள ரசிகர்களிடையே தொடர்ந்து அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன நடிகர் துல்கர் சல்மான் தனது கடின உழைப்பு மற்றும் திறமை காரணமாக தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். அது மட்டும் இன்றி துல்கர் சல்மானின் கதை தேர்வில் அவரது ரசிகர்களுக்கு ஒரு அபார நம்பிக்கை உள்ளது. துல்கர் சல்மான் ஒரு படத்தை தேர்வு செய்து நடித்தால் அது நிச்சயமாக சிறப்பாக இருக்கும் என்பதில் அவர்களுக்கு அலாதி நம்பிக்கை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்றது 20-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட தேதி இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் தற்போது துல்கர் சல்மான் வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தள்ளிப்போனது துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் ரிலீஸ்:

அதன்படி துல்கர் சல்மான் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, திரைப்படம் இன்னும் பிரம்மாண்டமாகிறது. வெளியீடு இன்னும் பரவலாகிறது. இதற்கான எதிர்பார்ப்பை நாங்கள் நன்கு அறிவோம். தாமதத்திற்கு வருந்துகிறோம். இருப்பினும், ஐ அம் கேம் திரைப்படம் இப்போது செப்டம்பர் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
முன்னதாக ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகவிருந்த இத்திரைப்படம், இப்போது புதிய தேதியில் வெளியாகிறது. பல்வேறு சந்தைகளில் பரவலான திரையரங்கு வெளியீட்டிற்காகத் தயாராகி வரும் நிலையில், இப்படத்திற்கான ஒரு பெரிய தொலைநோக்குப் பார்வையுடன் இந்த புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த திரையரங்கு அனுபவம் கிடைக்கவுள்ளது.ஐ அம் கேம் திரைப்படத்திற்குத் தகுதியான பிரம்மாண்டம், பரந்த சென்றடைதல் மற்றும் திரையரங்கு வெளியீட்டு வாய்ப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு சந்தைகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் இப்படத்தை பெரிய திரையில் கண்டு ரசிக்க முடியும். காத்திருப்பு காலம் சற்று நீள்கிறது, ஆனால் கேம் இன்னும் பிரம்மாண்டமாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… விரைவில் வெளியாகும் மண்டாட்டி படத்தின் 2-வது சிங்கிள் – சூரி கொடுத்த சூப்பர் அப்டேட்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய் சேதுபதியின் 56-வது படத்தின் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் அட்லி – வைரலாகும் பதிவு!

Follow Us