இணையத்தில் வைரலாகும் டாக்ஸிக் படத்தின் ரன் டைம் மற்றும் சென்சார் அப்டேட்
Toxic Movie Censor And Run Time Update | நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி பான் இந்திய மொழிகளில் தற்போது அதிக அளவில் பேசப்பட்டு வரும் படம் டாக்ஸிக். இந்தப் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கன்னட சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் பிரபல நாயகனாக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவர் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன பட்ஜெட் படங்களிலேயே நடித்து வந்தார். தொடர்ந்து சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த நடிகர் யாஷிற்கு ஜாக்பாட் படமாக அமைந்தது கேஜிஎஃப் படம். இந்தப் படத்தில் நடிகர் யாஷ் தனது உடல் எடையை கூட்டி கட்டுமஸ்தான உடலுடன் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தினார். மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து கன்னட ஸ்டாராக இருந்த நடிகர் யாஷ் பான் இந்திய ஸ்டாராக மாறியது குறிப்பிடத்தக்கது. இந்த கேஜிஎஃப் படம் மொத்தம் இரண்டு பாகங்களாக வெளியானது. இரண்டு பாகங்களும் உலக அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு பாகங்களுக்கு பிறகு நடிகர் யாஷ் எந்த இயக்குநரின் இயக்கத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்படி ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அமைந்தது நடிகர் யாஷின் படம். இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் நடிகர் யாஷ். இந்தப் படத்தின் திரைக்கதையில் நடிகர் யாஷ் பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.




டாக்ஸிக் படத்தின் ரன் டைம் மற்றும் சென்சார் அப்டேட் என்ன தெரியுமா:
மேலும் இந்த டாக்ஸிக் படம் தொடர்பான போஸ்டர்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வரும் நிலையில் படம் வருகின்ற 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் மொத்தம் 3 மணி நேரம் 11 நிமிடங்களைக் கொண்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… அதிக பார்வைகளைப் பெற்ற பட்டாம்பூச்சி பாடல் – ஜிவி பிரகாஷ் வெளியிட்ட பதிவு
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#ToxicTheMovie given “A” in India 🇮🇳
Runtime – 3hrs 11 mins (191 mins) #Yash pic.twitter.com/E7kEaDkAwG— Movies Singapore (@MoviesSingapore) August 10, 2026
Also Read… சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் பட டிக்கெட் ப்ரீ-புக்கிங் எப்போது தொடக்கம்? – வெளியான அறிவிப்பு!