AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் பட டிக்கெட் ப்ரீ-புக்கிங் எப்போது தொடக்கம்? – வெளியான அறிவிப்பு!

Vishwanath and Sons Movie Ticket Booking: தென்னிந்திய திரைப்பட ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில், தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் பட டிக்கெட் ப்ரீ-புக்கிங் எப்போது தொடக்கம்? – வெளியான அறிவிப்பு!
விஸ்வநாத் & சன்ஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Aug 2026 14:56 PM IST

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் நேரடி தமிழ் திரைப்படமாக உருவாகியுள்ளதுதான் விஸ்வநாத் & சன்ஸ் (Vishwanath and Sons). இந்த படத்தில் கோலிவுட் நாயகனாக சூர்யா (Suriya) அதிரடி வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இப்படமானது வயது வித்தியாசம் கொண்ட ஒரு சுவாரஸ்யமான காதல் கதையில் உருவாகியுள்ளது. இதில் சூர்யா “சஞ்சய் விஸ்வநாத்” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சித்தாரா எண்டெர்டைமெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க, தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் (GV Prakash( இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இப்படத்திலிருந்து இதுவரை மொத்தம் 3 பாடல்கள் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் பேமிலி பேக்ரவுண்ட் கொண்ட இந்த திரைப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதை முன்னிட்டு இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் நடைபெற்றுவருகிறது. இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் எப்போது தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அதிக பார்வைகளைப் பெற்ற பட்டாம்பூச்சி பாடல் – ஜிவி பிரகாஷ் வெளியிட்ட பதிவு

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது:

சூர்யா மற்றும் மமிதா பைஜூவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டும் இருக்கிறது. அந்த வகையில், இப்படத்தின் தமிழக டிக்கெட் ப்ரீ புக்கிங், 2026 ஆகஸ்ட் 11ம் தேதியில் மாலை 6 மணியளவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: நான் சினிமாவில் நடிகையாக நடிக்கவேண்டும் என்ற முடிவை எடுத்து அப்போதுதான் – மமிதா பைஜூ!

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு எக்ஸ் பதிவு:

சூர்யாவின் இந்த படமானது முற்றலும் வித்தியாசமான கதைக்களத்தில், த்தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யா, மமிதா பைஜுவுடன் நடிகைகள் ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் போன்ற பிரபலங்களும் முக்கியமான வேடத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு படத்திற்கு பின் சூர்யாவுக்கு இப்படம் சிறப்பான வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us