AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்கூல் படிக்கும் போது… சூர்யா குறித்த நினைவுகளை பகிர்ந்த மமிதா பைஜூ

Actress Mamitha Baiju shares her childhood memory | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மமிதா பைஜூ. இவர் சமீபத்தில் நடிகர் சூர்யா குறித்த தனது குழந்தை பருவ நினைவுகளைப் பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஸ்கூல் படிக்கும் போது… சூர்யா குறித்த நினைவுகளை பகிர்ந்த மமிதா பைஜூ
சூர்யா - மமிதா பைஜூImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Aug 2026 19:24 PM IST

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மமிதா பைஜு. இவர் மலையாள சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து நடிகை மமிதா பைஜூ நாயகியாக பிரேமலு என்ற படத்தில் மலையாள சினிமாவில் நடித்து இருந்தார். இந்தப் படம் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதில் நாயகனாகவும் நாயகியாகவும் நடித்த நடிகர்கள் நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ இருவருக்கும் படங்களின் வாய்ப்புகள் வரிசைக்கட்டி குவிந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக நடிகை மமிதா பைஜுவிற்கு தமிழ் மொழியில் படங்கள் வரிசைக்கட்டத் தொடங்கியது.

இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் நடிகை மமிதா பைஜூ நடிப்பில் தமிழ் மொழியில் இரண்டு படங்கள் இதுவரை வெளியாகி உள்ளது. அடுத்ததாக நடிகர் சூர்யா உடன் இணைந்து நடித்து உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகை மமிதா பைஜூ நடிகர் சூர்யா குறித்த தனது சிறு வயது நினைவுகளை பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யா குறித்த நினைவுகளை பகிர்ந்த மமிதா பைஜூ:

சூர்யா சார், உங்களுக்கு இது நினைவிருக்காது. ஆனால் 2015-ல் ஒரு நிகழ்ச்சிக்காக நீங்கள் லுலு மால் (Lulu Mall) வந்திருந்தீர்கள். அப்போது நான் எட்டாம் வகுப்பிலும், என் சகோதரர் பதினொன்றாம் வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்தோம். உங்களைச் சந்திக்க நான் மிகவும் ஆசைப்பட்டேன், ஆனால் என் பெற்றோர் என்னை அங்கு செல்ல அனுமதிக்கவில்லை.

என் சகோதரரும் அவரது நண்பர்களும் உங்களைச் சந்தித்து, உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் காட்டினார்கள். அன்று நான் மிகவும் மனமுடைந்து போயிருந்தேன். ஆனால் வாழ்க்கை சில சமயங்களில் மிக அழகாக ஒரு முழு வட்டத்தை நிறைவு செய்கிறது. இன்று, அதே ‘லுலு மால்’-ல் உங்களுடன் இருக்கும் வாய்ப்பும், உங்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்துள்ளது. உங்கள் புகைப்படத்தைப் பார்த்து ரசித்த அந்தச் சிறு வயது ரசிகையிலிருந்து, இன்று உங்களுடன் ஒரே திரையில் தோன்றும் நிலை வரை… இது ஒரு கனவு போலவே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… Jason Sanjay: அம்மா.. தங்கையை விட.. அப்பா எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தார் – ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Thirupaachi: ரீ-ரிலீஸ் செய்யப்படும் விஜய் – திரிஷாவின் திருப்பாச்சி.. எப்போது தெரியுமா?

Follow Us