AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒன்னு நெனச்சா பத்து நடக்கும்… இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் சீசன் 10 புரோமோ!

Bigg Boss Tamil Season 10 Promo: விஜய் டிவி ரசிகர்களும் காத்திருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெரும் நிலையில், பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அது தொடர்பான புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஒன்னு நெனச்சா பத்து நடக்கும்… இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் சீசன் 10 புரோமோ!
பிக் பாஸ் தமிழ் சீசன் 10Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 08 Aug 2026 16:48 PM IST

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஆண்டுதோறும் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் ஷோதான் பிக் பாஸ் (Bigg Boss). இதுவரை தமிழில் மொத்தமாக 9 சீசன்கள் வெளியாகியிருக்கிறது. இந்த 9 சீசன்களும் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று, விஜய் டிவியின் டிஆர்பி-யை அதிகமாக்கியிருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 9 கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி தொடக்கத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10 Tamil) எப்போது ஒளிபரப்பாகும் என பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுக்கவுள்ளார்.

சீசன் 7 வரை கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 10 எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதை பிக் பாஸ் சீசன் 10 விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி – பாலாஜி தரணீதரன் கூட்டணி படத்தின் ரிலீஸ் எப்போது? – வைரலாகும் தகவல்!

பிக் பாஸ் சீசன் 10 குறித்த புரோமோ வீடியோ குறித்த எக்ஸ் பதிவு:

பிக் பாஸ் சீசன் 10 எப்போது தொடங்கும்:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது முற்றிலும் வித்தியாசமாக தொடங்குகிறதாம். இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக பணியாற்ற, சாதாரணமான நபர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுகிறார்கலாம். இந்த நிகழ்ச்சியானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் இறுதியில் ஒளிபரப்பாகவுள்ளதாம். விரைவில் எப்போது ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கவின் – நயன்தாராவின் ஹாய் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது

பிக் பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சி:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் சாதாரணமான நபர்களும் கலந்துகொள்ளும் நிலையில், அந்த நபர்களை தேர்ந்தெடுப்பதை ஒரு நிகழ்ச்சியாக நடத்த உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் ஓவியா, ஆரி அர்ஜுனா மற்றும் ராஜு ஜெயமோகன் போன்ற பிரபலங்கள் நடுவார்களாகவும், மாயா கிருஷ்ணன் தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறதாம். இந்த நிகழ்ச்சியிலிருந்து இரு நபர்கள் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்குபெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us