பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் புது மாற்றம்… ஒளிபரப்பாக உள்ளது தி காமென் மேன் நிகழ்ச்சி!
Bigg Boss The Common Man | பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டு வெளியாகும் போது புதுப் புதுப் மாற்றங்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த 2026-ம் ஆண்டில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக்கு முன்பு தி காமென் மேன் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழ் மொழியில் தொடங்கியது. இந்தியாவில் முன்னதாக இந்தி மொழியில் பிரபலமான இந்த நிகழ்ச்சி பிறகு தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்து தொடங்கி ஒளிபரப்பானது. அதன்படி தமிழ் மொழியில் இதுவரை 9 சீசன்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து 1 முதல் 7 சீசன்களால நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு நடிகர் விஜய் சேதுபதி கடந்த இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது 10-வது சீசனையும் அவரே தொகுத்து வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசன்களிலும் தொடர்ந்து ஒவ்வொரு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியிலும் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் கலந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.




ஒளிபரப்பாக உள்ளது பிக்பாஸ் தி காமென் மேன் நிகழ்ச்சி:
அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வமாக இருக்கும் பொது மக்களை தேர்வு செய்ய நிகழ்ச்சி குழு ஒரு போட்டியை நடத்த உள்ளது. அந்த போட்டிக்கும் தி காமென் மேன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னதாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஆரி, ராஜு மற்றும் ஓவியா ஆகியோர் நடுவர்களாக உள்ள நிலையில் மாயா நிகழ்ச்சி தொகுப்பாளராகி உள்ளார். இந்த நிகழ்ச்சி வருகின்ற 16-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக உள்ளது. இது பார்வையாளர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… உறுதியானது நடிகர் கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜாவின் கூட்டணி… வைரலாகும் அப்டேட்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
இதோ நம்ம Host Maya-வுடன்… Judges Aari, Raaju & Oviya | Bigg Boss – The Common Man ஆரம்பம்..😎🔥
Bigg Boss – The Common Man
ஆகஸ்ட் 16 முதல் திங்கள்- வெள்ளி இரவு 10.00 மணிக்கு..
சனி – ஞாயிறு மாலை 5.30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTheCommonMan #BBTheCommonMan… pic.twitter.com/L0aSFlaTtI— Vijay Television (@vijaytelevision) August 3, 2026