AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vijay Sethupathi: கேமியோ பண்றதே நிப்பாட்டிட்டேன்… ஜெயிலர் 2ல் நடிக்க காரணம் இதுதான் – விஜய் சேதுபதி பேச்சு!

Vijay Sethupathi About Cameo Roles: தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்துவருபவர் விஜய் சேதுபதி. இவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ள நிலையில், அதில் நடித்தற்கான காரணம் மற்றும் கேமியோ வேடங்களில் நடிப்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

Vijay Sethupathi: கேமியோ பண்றதே நிப்பாட்டிட்டேன்… ஜெயிலர் 2ல் நடிக்க காரணம் இதுதான் – விஜய் சேதுபதி பேச்சு!
ஜெயிலர் 2 படத்தில் நடித்தது குறித்து விஜய் சேதுபதிImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 01 Aug 2026 21:50 PM IST

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பேமஸான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவர் இறுதியாக இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraj) இயக்கத்தில் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii) என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியாகியிருந்த இப்படமானது, அனைத்து ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் தெலுங்கு மற்றும் தமிழ் இயக்குநர்களுடன் புது புது படங்களில் நடித்துவந்தார். தற்போது சூப்பர் டீலக்ஸ் (Super Deluxe) பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் பக்கத்தில் பாக்கெட் நாவல் (Pocket Novel) என்ற படத்தில் நாயகலனாக நடித்துவருகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் (Malavika Mohanan) நாயகியாக நடித்துவருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றுவரும் நிலையில், சிறப்பாக உருவாகிறது. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி ஜெயிலர் 2 படத்தில் கேமியோ வேடத்தில் நடிப்பதை உறுதிசெய்துள்ளார். மேலும் கேமியோ வேடத்தில் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் நடித்த காரணம் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நான் எப்போதும் உன்னையே தேர்ந்தெடுப்பேன்.. காதலனை அறிமுகம் செய்த மிருணாளினி ரவி!

ட்ரெயின் திரைப்படம் குறித்து விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் பதிவு:

ஜெயிலர் 2 மற்றும் கேமியோ வேடங்களில் நடிப்பதை குறைத்து பற்றி பேசிய விஜய் சேதுபதி:

அந்த பேட்டியில் பேசில்லையா விஜய் சேதுபதி அதில், “முதலில், நான் படங்களில் கேமியோ வேடங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். ஜெயிலர்2 மட்டுமே இதற்கு விதிவிலக்கு, அதிலும் நான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்காக மட்டுமே நடித்தேன். அவருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு வேண்டும் என்று விரும்பினேன், அதனால் ஜெயிலர் 2-வில் கேமியோ வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஒரு போஸ்டரில் ரஜினி சாருடன் என் படம் இடம்பெற்றால், யாரும் என்னைக் கவனிப்பதில்லை, ஏனென்றால் எல்லா கவனமும் இயல்பாகவே அவர் பக்கம் சென்றுவிடுகிறது.

இதையும் படிங்க: அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்வி மட்டும் மாறவே இல்லை – சசிகுமார்!

இருப்பினும், நான் மற்ற படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடித்தால், போஸ்டர்கள் பெரும்பாலும் எனக்கு சமமான அல்லது அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன, இது எனது மற்ற திட்டங்களைப் பாதிக்கக்கூடும். அதனால்தான் இனிமேல் படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us