Vijay Sethupathi: ஸ்லம் டாக் படம் பூரி ஜெகன்நாத் இயக்கிய சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் – விஜய் சேதுபதி!
Vijay Sethupati About Puri Jagannadh: விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க தெலுங்கி முதலில் முதலாக உருவாகியுள்ள படம்தான் ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு. இப்படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்க, சமீபத்தில் இதன் டீசர் வெளியாகியிருந்தது. இப்படத்தின் விழாவின்போது பேசிய விஜய் சேதுபதி, இயக்குநர் பூரி ஜெகன்நாத் பற்றி பேசியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தென்னிந்திய மக்கள் மத்தியில் பேமஸான நாயகனாக இருந்துவருகிறார். இவர் தமிழ் மொழியில் ஹீரோவாக தொடர்ந்து படங்களில் நடித்துவரும் நிலையில், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். இந்நிலையில் முதல் முறையாக தெலுங்கில் இவர் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம்தான் ஸ்லம் டாக் -33 டெம்பிள் ரோடு (Slum Dog-33 Temple Road). இப்படத்தில் விஜய் சேதுபதி கதநாயகனாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் (Samyuktha Menon) நடித்துள்ளார். இப்படமானது தெலுங்கு மற்றும் தமிழ் மொழியை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி பிச்சைக்காரன் வேடத்திலும் நடித்துள்ளார்.
இதன் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. டீசர் வெளியீடு நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) மற்றும் அவருடன் முன்பே படத்தில் பணியாற்றியது குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ரசிக்கத்தக்க குடும்ப பொழுதுபோக்கு… அர்ஜுன் தாஸின் கான் சிட்டி படம் எப்படி இருக்கு? – முதல் விமர்சனம் கொடுத்த தயாரிப்பாளர்!
இயக்குநர் பூரி ஜெகன்நாத்துடன் பணியற்றியது குறித்து விஜய் சேதுபதி பகிர்ந்த விஷயம்:
அந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, ” ஸ்லம் டாக் படம் பூரி சாரின் சினிமா பயணத்தில் சிறந்த படங்களில் ஒன்றாக மாறும் ஆற்றல் கொண்டது என்று நான் உண்மையாகவே உணர்கிறேன். நான் முன்னதாக இயக்குநர் பூரி ஜெகன்நாத் சார் இயக்கிய, எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் ரீமேக்கில் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாகப் பணியாற்றியிருந்தேன்.
இதையும் படிங்க: கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் இணையும் விஜய் சேதுபதி? – விவரங்கள் இதோ!
இப்படத்தின் ஷூட்டிங்கின்போது அதைப்பற்றி நான் அவரிடம் கூடச் சொல்லியிருந்தேன். அவரிடம் நான் வியக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், அவர் எப்போதும் தன் மனதில் இரண்டு அல்லது மூன்று கதைகளைத் தயாராக வைத்திருப்பார்” என அதில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் குறித்து பெருமையாக பேசியிருந்தார்.
ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு திரைப்படத்தின் டீசர் குறித்து விஜய் சேதுபதி வெளியிட்ட பதிவு:
A tale of survival, rage, and destiny awaits.#SlumDog – 33 Temple Road TEASER OUT NOW ❤️🔥
In cinemas this 2026 💥
A #PuriJagannadh film 🎬@Charmmeofficial Presents 🎥
Produced by Puri Jagannadh, Charmme Kaur, JB NarayanRao KondrollaReleases in… pic.twitter.com/ferVQpMi8I
— VijaySethupathi (@VijaySethuOffl) June 8, 2026
இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக உள்ளது. இப்படமானது ஆக்ஷன், எமோஷனல் மற்றும் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், இந்த 2026ம் ஆண்டில் வெளியாகவுள்ளது. இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதிசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.