Con City: ரசிக்கத்தக்க குடும்ப பொழுதுபோக்கு… அர்ஜுன் தாஸின் கான் சிட்டி படம் எப்படி இருக்கு? – முதல் விமர்சனம் கொடுத்த தயாரிப்பாளர்!
Con City Movie First Review: தமிழ் பிரபல ஹீரோ அர்ஜுன் தாஸ் நடிப்பில் சிறப்பாக தயாராகியுள்ள புதிய திரைப்படம் கான் சிட்டி. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூன் 26ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு பார்த்த தயாரிப்பாளர் விதுர்ஸ் என்பவர் முதல் விமர்சனம் கொடுத்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலம் மிக ஹீரோவாகவும், வில்லனாகவும் தனது நடிப்பின் மூலம் அசத்திவருபவர் அர்ஜுன் தாஸ் (Arjun Das). இவர் சமீபத்தில் பவன் கல்யாணின் (Pawan kalyan) தி ஓஜி (The OG) படத்தில் வில்லனாக நடித்து தெலுங்கு மக்களையும் கவர்ந்திருந்தார். இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாக படங்களில் நடித்துவரும் நிலையில், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்துவருகிறார். இவரின் நடிப்பில் வரும் 2026ம் ஆண்டு ஜூன் 26ம் தேதியில் வெளியாக தயாராகியுள்ள படம்தான் கான் சிட்டி (Con City). இப்படத்தை இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் (Harish Durairaj) இயக்கியுள்ள நிலையில், பவர் ஹவுஸ் பிக்ச்சர்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிர்வாணம் தயாரித்துள்ளது. இதில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ஆனா பென் (Anna Ben) நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் யோகி பாபு (Yogi Babu) மற்றும் வடிவுக்கரசியும் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படமானது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், விரைவில் புரோமோஷன் பணிகளும் தொடங்கவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தை பார்த்த அஹிம்சா பிலிம்ஸ் தயாரிப்பாளர் விதுர்ஸ், இப்படத்திற்கு முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: தலைவர் 173-ல் டாக்டராக ரஜினிகாந்த்..? அஸ்வத் இயக்கத்தில் இதுவரை நடித்துடாத வேடத்தில் சூப்பர் ஸ்டார்!
அர்ஜுன் தாஸின் கான் சிட்டி படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த தயாரிப்பாளர்:
தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை பகிர்ந்த தயாரிப்பாளர் விதுர்ஸ், அதில் “சமீபகாலமாக தமிழ் சினிமா சிறந்த படைப்புகளை வழங்கி வருகிறது, கான் சிட்டி அவற்றில் வித்தியாசமான ஒன்று. இது ஒரு ரசிக்கத்தக்க குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம். தேவைப்படும்போது நகைச்சுவையாகவும், தேவைப்படும்போது உணர்ச்சிப்பூர்வமாகவும், எப்போதும் ஈடுபாட்டுடனும் என அனைத்தையும் மிகச் சரியாக சமநிலைப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் இணையும் விஜய் சேதுபதி? – விவரங்கள் இதோ!
திரைப்படத்திற்கு செல்வது ஏன் அவ்வளவு சிறப்பானது என்பதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படம் இது. பொழுதுபோக்கை எதிர்பார்த்து உள்ளே சென்று, புன்னகையுடன் வெளியே வருவீர்கள். படக்குழுவினர் அனைவரும் ஆரம்பம் முதல் இறுதி வரை தங்கள் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளனர். அர்ஜுன்தாஸ் சிறப்பாக நடித்துள்ளார், மேலும் யோகிபாபுவும் தனது ஸ்டைலில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் ஹரிஷ் துரைராஜ், உங்கள் முதல் இயக்கத்திற்கு வாழ்த்துகள்” என அதில் அவர் கூறியுள்ளார்.
அர்ஜுன்தாஸின் கான் சிட்டி படத்திற்கு விமர்சனம் கொடுத்து தயாரிப்பாளர் வெளியிட எக்ஸ் பதிவு:
Tamil cinema keeps delivering gems lately, and #ConCity is another one ♥️♥️💎
An enjoyable family entertainer that gets the balance just right — funny when it needs to be, emotional when it needs to be, and always engaging. The kind of film that reminds you why going to the… pic.twitter.com/O68AS5nxVM
— vithurs (@vithurs_) June 8, 2026
கான் சிட்டி படமானது வெளியீட்டிற்கு தயாராகிவரும் நிலையில், ப்ரோமோஷன் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இப்படமானது ஒரு வித்தியாசமான படமாக தயாராகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் நிச்சயமாக வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.