AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Con City: நான் தான் கிங்… அர்ஜுன்தாஸின் கான் சிட்டி படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!

Con City Movie: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அர்ஜுன்தாஸ். இவரின் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம்தான் கான் சிட்டி. இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Con City: நான் தான் கிங்… அர்ஜுன்தாஸின் கான் சிட்டி படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!
நான் தான் கிங் பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 09 May 2026 21:09 PM IST

நடிகர் அர்ஜுன்தாஸ் (Arjundas) தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார். குறிப்பாக தற்போது தமிழ் சினிமாவில் இவர் ஹீரோவாகவும் பட்ஜெட் படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தொடர்ந்து புது புது திரைப்படங்கள் தயாராகிவரும் நிலையில், வித்தியாசமான கதையில் உருவாகியுள்ள படம்தான் கான் சிட்டி (Con City). இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் (Harish Durairaj) இயக்க, பவர் ஹவுஸ் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துவருகிறது. இதில் அர்ஜுன்தாஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அன்னா பென் (Anna Ben) நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் கொட்டுகாளி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குடும்பத்திற்கு கிடைக்கும் பணம் கொடுக்கும் மிஷினை வைத்து இப்படத்தின் கதை அமைந்துள்ளது. அந்த வகையில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷென் ரோல்டன் இசையமைத்துள்ள நிலையில், ஏற்கனவே முதல் சிங்கிள் வெளியாகியிருந்தது. அந்த வகையில், நான் தான் கிங் (Naan Dhaan King) என்ற இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. கருப்பு படம் குறித்து அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!

கான் சிட்டி பட இரண்டவது பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த கான் சிட்டி படத்தில் அர்ஜுன்தாஸ் மற்றும் அன்னா பென்னுடன் நடிகர்கள் யோகிபாபு, வடிவுக்கரசி மற்றும் அகிலன் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தி பணம் கொடுக்கும் ஒரு மிஷின் அர்ஜுன்தாஸிற்கு கிடைக்கிறது. அவரின் குடும்பமே மிடில்கிளாஸ் குடும்பம். அந்த பணம் கொடுக்கும் மிஷினை அவர் குடும்பத்திற்கு தெரியாமல் மறைத்து வணித்திருந்தாலும், அனைவருமே அதை எடுத்து பயன்படுத்திவிடுகிறார்கள்.

இதையும் படிங்க: மீண்டும் ஒரு பிரச்சனையில் ஜார்ஜ் குட்டி.. வெளியானது மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’ பட அதிரடி ட்ரெய்லர்!

இதனால் நடக்கும் பின் விளைவுகள் மற்றும் நகைச்சுவை என வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படம் 2026 ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மே மாத இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது. இன்னும் ரிலீஸ் தேதி எப்போது என உறுதியாகவில்லை. 2026 ஆண்டு மே இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் இப்படம் வெளியாகி அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us